Gold and silver rate today : போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!!
Gold and silver rate today : போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold and silver rate today : தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர வைத்து வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலையானது சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்துள்ளது.
தங்கத்தின் மீதான ஈர்ப்பு
தங்க நகைகளின் மீதான ஈர்ப்பு மற்ற நாடுகளை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக திருமண நிகழ்வுகளில் தங்கத்திற்கு என தனி இடம் கொடுக்கப்படுகிறது. மேலும் எதிர்கால சேமிப்பாகவும் தங்க நகைகளை மக்கள் வாங்கி வருகிறார்கள். குறிப்பாக கல்வி, மருத்து செலவு என அத்தியாவசிய தேவைக்கு தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாகவே உள்ளது. எந்த நேரத்திலும் விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ முடியும் என்பதால் தங்கம் விலை அதிகரித்தாலும் மக்கள் போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள்.
தங்கத்தில் தொடரும் முதலீடு
தங்கத்தின் விலையானது கடந்த 6 ஆண்டுளில் மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது ஒரு லட்சத்து 34 ஆயிரம் என்ற இமாலய உயரத்தை 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் எட்டியது. இதனையடுத்து ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலையானது குறைந்து வருகிறது. இந்தநிலையில்
ஏறி இறங்கும் தங்கம் விலை
தங்கத்தின் விலையானது நேற்று சற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது அதிகரித்து நகைப்பிரியர்களை அதிரவைத்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,220க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,05,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இந்த நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது உயர்ந்து வருவது நகைப்பிரியர்களை அதிர வைத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி