📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 11, 2026 11:02 AM

GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு

GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு

GOLD AND SILVER RATE TODAY : யப்பா..ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,400 உயர்ந்தது.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் -இன்றைய விலை இதோ..

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இந்த வாரமும் ஷாக் கொடுத்துள்ளது. அந்த வகையில் சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்துள்ளது.

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்திய திருமணங்கள், விஷேசங்களில் தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தங்கம் எதிர்கால சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது தற்போது ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. எனவே தங்கத்தில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற காரணத்தால் மக்கள் தங்க நகைகளை போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள்.

தங்கம் விலை உயர காரணம் என்ன.?

தங்கம் விலையானது இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியது மட்டுமில்லாமல் புதிய உச்சமான 1.34 லட்சத்தை எட்டியது. ஆனால் அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலையானது சரிய தொடங்கியது. அந்த வகையில் ஈரான்- அமெரிக்கா ஈரான் போர் காரணமாக தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டாளர்கள் பார்வை திரும்பியது. முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிலையில் தற்போது போர் பதற்றம் சற்று ஓய்ந்திருக்கும் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் தங்கம் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தொடர்ந்து உயரும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராம் ஒன்று 300 ரூபாய் அதிகரித்து 14,250 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,400 ரூபாய் உயர்ந்து 1,14,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி