Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி மாலையிலும் விலை உயர்வு
Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?
கடந்த சில நாட்களாக விலை குறைந்த தங்கம், இன்று ஒரே நாளில் காலை மற்றும் மாலையில் விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியின் தற்போதைய விலை என்ன.?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்த நிலையில், இன்று காலையில் விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்தது. அதேபோல், மாலையிலும் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை இன்று மாலையில் சவரனுக்கு 640 ரூபாயும், வெள்ளியின் விலை கிராமிற்கு 10 ரூபாயும் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. அந்த வகையில், கடந்த 3 நாட்களில் மட்டும் சவரனுக்கு 3,680 ரூபாய் குறைந்து, நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது திடீரென அதிகரித்துள்ளது.
அதன்படி, இன்று காலையில் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 13,220 ரூபாய்க்கும், சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் 1,05,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் மீண்டும் கிராமிற்கு 80 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு 13,300 ரூபாய்க்கும், சவரனுக்கு 80 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,06,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் அதிரடி உயர்வு
இதே போல வெள்ளி விலையும் இன்று இரு முறை உயர்ந்துள்ளது. அதன்படி, இன்று காலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மாலையிலும் கிராமிற்கு 10 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 10 ஆயிரம் ரூபாய் விலை உயர்ந்து, 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி