GOLD RATE TODAY: வாரத்தின் முதல் நாளே இப்படியா.!! சவரனுக்கு ரூ.1440 உயர்வு
GOLD RATE TODAY: வாரத்தின் முதல் நாளே இப்படியா.!! சவரனுக்கு ரூ.1440 உயர்வு- வெள்ளி விலை என்ன தெரியுமா.?

GOLD RATE TODAY: தங்கத்தின் விலை கடந்த வாரம் முழுவதும் ஏறி இறங்கி வந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. இதே போல வெள்ளியின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இதன் காரணமாக தங்கத்தில் முதலீடும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் 55ஆயிரம் ரூபாய் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது புதிய உச்சமாக ஒரு சவரன் 1.34 லட்சத்தை தாண்டியது.

இதனால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அடுத்த 3 நாட்களில் ஒரு சவரனுக்கு 22ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கத்தின் விலை குறைந்தது. கடந்த வாரத்தை பொறுத்தவரை ஒரு சவரனுக்கு 1,500 ரூபாய் அதிகரித்தால், அடுத்த நாள் ஆயிரம் ரூபாய் குறைந்தது. எனவே தங்கத்தின் விலையானது நிலையில்லாமல் ஏற்றம் இறக்கமாகவே காணப்பட்டது.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை என்ன.?

இந்த நிலையல் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. இன்று கிராம் 180 ரூபாய் உயர்ந்து சவரனுக்கு 14,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து 1,18,880 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதே போல வெள்ளியின் விலையும் உயர்வை சந்தித்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகரித்து 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.