📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 05:00 PM

Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு

Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு

Gold rate today : மீண்டும் குறைந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.!! நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்

Gold rate today : தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் 4600 ரூபாய் குறைந்த நிலையில், இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது.

குறைந்து வரும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நகைகளை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் கடந்த சில வருடங்களாகவே தங்கத்தின் விலையானது புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் 50ஆயிரத்தை கடந்த தங்கம் விலை தற்போது 1.34 லட்சம் என்ற புதிய உச்சத்தை தொட்டு நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக டாலருக்கு பதிலாக தங்கள் நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் அதிகளவு தங்கத்தை வாங்கி குவித்து வருகிறார்கள். இதன் காரணமாக ஒரு பக்கம் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், ஈரான் அமெரிக்கா இடையிலான போர் காரணமாக தங்கம் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக தங்கம் விலையானது கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது.

தங்கம் விலை குறைய காரணம் என்ன.?

சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு வலுவடைந்து வருவது முக்கிய காரணிகளாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச சந்தைகளில் தங்கம் விலைகளில் ஏற்பட்ட சமீபத்திய ஏற்ற இறக்கங்கள் காரணமாக உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை சற்று குறைந்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாகவே தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 6240 வரை சரிந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் 4600 ரூபாய் குறைந்த நிலையில் இன்றும் குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 640 ரூபாய் குறைந்து 1,20, 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையை பொறுத்த வரை மாற்றமின்றி நேற்றைய விலையான கிராம் ஒன்று 295 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 95ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு 6240 ரூபாய் குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.