📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 27, 2026 05:00 PM

Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?

Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?

Gold rate today : மீண்டும் உயர தொடங்கிய தங்கம் விலை.! இன்று ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?

Gold rate today : போர் காரணமாக தங்கத்தின் விலையானது அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில், திடீர் திருப்பமாக கடந்த 5 நாட்களாக தொடர்ந்து தங்கத்தின் விலை சரிந்து வருகிறது. இதன் காரணமாக 6,560 ரூபாய் குறைந்துள்ளது. இந்த நிலையல் இன்று தங்கம் விலை அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

குறையும் தங்கம் விலை

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தை அதிகளவு வாங்கி குவிக்கும் நிலையும் நீடித்து வருகிறது. அதிலும் இந்தியாவில் திருமணங்கள், விஷேச காலங்களில் தங்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஆபரணமாக உள்ளது. எனவே நகைக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. தங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்காக அதிகளவு தங்கங்களை இந்திய மக்கள் வாங்கி வருகிறார்கள்.

அதே நேரம் டாலருக்கு நிகராக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கவும் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவு வாங்கியதால் தங்கம் விலையானது கடந்த ஒரு சில மாதங்களில் பல மடங்கு அதிகரித்தது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க முடியாமல் நகைக்கடைகளில் நகைகளை வேடிக்கை பார்க்கும் நிலை தான் உருவானது. இந்த நிலையில் கூடுதல் ஷாக் கொடுக்கும் வகையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தங்கத்தின் விலை எதிர்பாரா திருப்பமாக குறைந்து வருகிறது.

5 நாட்களில் தங்கம் விலை

வாரத்தின் முதல் நாள் பிப்ரவரி 2 ஆம் தேதி குறையத்தொடங்கிய தங்கம் விலை கடந்த 5 நாட்களாக தொடர்ந்து வருகிறது இதன் காரணமாக நகைப்பிரியர்கள் குஷியில் உள்ளனர்.

தங்கத்தின் விலையானது கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் 6,560 ரூபாய் அளவிற்கு குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது திடீரென உயர்ந்துள்ளது. கிராமுக்கு 90 ரூபாய் அதிகரித்து 15,050 ரூபாய்க்கும், சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 1,20,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

அதே நேரம் வெள்ளி விலையை பொறுத்த வரை எந்தவித மாற்றமின்றி நேற்றைய விலையான கிராமுக்கு 290 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2.90 லட்சத்திற்கும் விற்பனயாகிறது. கடந்த 5 நாட்களாக குறைந்திருந்த தங்கம் விலை இன்று அதிகரித்திருப்பது நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.