📅 Wednesday, 05 August 2026 IST | ஆடி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 05, 2026 08:00 PM

Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை

Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை

Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?

தங்கத்தின் விலை இன்று காலை அதிரடியாக உயர்ந்த நிலையில், மாலையிலும் கணிசமாக விலை உயர்ந்து, ஒரே நாளில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. தங்கம், வெள்ளியின் தற்போதைய விலையை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில், மாலையில் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,240 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.

தங்கத்தில் முதலீடு

தங்கத்தின் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், தங்கத்தின் மீது பல ஆண்டுகளுக்கு முன்பாக முதலீடு செய்தவர்கள் தற்போது கோடீஸ்வரர்களாக உயர்ந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 2020-ம் ஆண்டு கிராம் ஒன்று 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் விலையானது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை தலை சுற்ற வைத்துள்ளது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது இந்த ஆண்டு தொடக்கத்தில் புதிய உச்சத்தை தொட்டாலும் அடுத்தடுத்து பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. அந்த வகையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு அதிகரித்ததால் தங்கம் விலையானது குறைந்தது. இதனால் நகைப்பிரியர்கள் இது தான் நல்ல சான்ஸ் என தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள்.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்று காலையில் தங்கத்தின் விலையானது, கிராம் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து 13,360 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,280 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மாலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி, கிராம் ஒன்றிற்கு 120 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,480 ரூபாய்க்கும், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,07,840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,240 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.

வெள்ளி விலையும் இன்று உயர்வு

வெள்ளி விலையானது நேற்று எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலையில், கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

மாலையில் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த வகையில், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி