📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 15, 2026 10:00 AM

Gold rate today : ரூ.10,000 உயர்ந்தது.! வாரத்தின் முதல் நாளே தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு

Gold rate today : ரூ.10,000 உயர்ந்தது.! வாரத்தின் முதல் நாளே தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு

Gold rate today : ரூ.10,000 உயர்ந்தது.! வாரத்தின் முதல் நாளே தங்கம், வெள்ளி நகைப்பிரியர்களுக்கு ஷாக்- இன்றைய விலை நிலவரம் இதோ..

Gold and silver rate today : ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக கடந்த வாரம் குறைந்த தங்கத்தின் விலையானது. வார இறுதியில் மீண்டும் உயர தொடங்கியது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலையானது அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தங்கம் விலை உயர காரணம் என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த சில வருடங்களில் எதிர்பாரா உச்சத்தை தொட்டுள்ளது. அந்த வகையில் ஒரு சவரன் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் சில வருடங்களுக்கு முன்பாக விற்பனையானது. 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் என்ற உயரத்தை தொட்டு நகைப்பிரியர்களை கதற விட்டது. இதனையடுத்து படிப்படியாக குறைந்த தங்கம் விலை தற்போது 1 லட்சத்து 15 ஆயிரம் என்ற விலையில் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் தங்கம் விலை உயர பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய வங்கிகள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்ய தொடங்கின. இதனால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பால் விலையானது உயர தொடங்கியது.

அமெரிக்கா- ஈரான் போர்

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் தொடக்கத்தில் குறைந்த வந்த நிலையில் வார இறுதி நாளில் தங்கம் விலையானது உயர தொடங்கியது. இந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று கிராமுக்கு 210 ரூபாய் அதிகரித்து 14,070 ரூபாய்க்கும், சவரனுக்கு 1680 ரூபாய் உயரந்து 1,12,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையானது இன்று அதிகரித்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 280 ரூபாய்க்கும் கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி