📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 30, 2026 10:32 AM

Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை

Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை

Gold rate today : உயர்ந்தது தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு எவ்வளவு.? இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன.?

Gold and silver rate today : தங்கத்தின் விலையானது கடந்த ஒரு வாரத்தில் பல மாற்றங்களை சந்தித்தது அந்த வகையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ளது.

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கத்தின் விலையானது உயர்ந்தாலும் நகைக்கடைகளில் தங்க நகைகளை வாங்க மக்களின் கூட்டமானது எப்போதும் அலைமோதியே காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது வரலாற்றில் இல்லாத வகையில் 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி தலை சுற்ற வைத்தது. இருந்த போதும் இந்திய மக்கள் தங்கத்தின் மீதாக அபரிமிதமான ஈர்ப்பு காரணமாக தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள். குறிப்பாக இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பதால் தங்க நகைகளை மக்கள் வாங்கி வருகிறார்கள்.

அமெரிக்கா- ஈரான் போர்

இதனிடையே தங்கத்தின் விலையானது தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலையானது சற்று குறைய தொடங்கியது. அந்த வகையில் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என நினைத்த முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீட்டை செலுத்தியதால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. இதனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்பனையான தங்கம் விலை அடுத்த சில மாதங்களில் ஒரு சவரன் 1 லட்சத்தை எட்டியது. தற்போது 1 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு 1720 ரூபாய் குறைந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அந்த வகையில், கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் அதிகரித்து 13,230 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து 1,05,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே நேரம் வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி கிராம் 235 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி