📅 Saturday, 13 June 2026 IST | வைகாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business June 12, 2026 01:30 PM

Gold Ratte Today: ஷாக் கொடுத்த தங்கம் விலை.! ஒரே நாளில் சரசரவென உயர்வு

Gold Ratte Today: ஷாக் கொடுத்த தங்கம் விலை.! ஒரே நாளில் சரசரவென உயர்வு

Gold Rate Today: ஷாக் கொடுத்த தங்கம் விலை.! ஒரே நாளில் சரசரவென உயர்வு- ஒரு கிராமுக்கே இவ்வளவா.!!

Gold Ratte Today: தங்கத்தின் விலையானது கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சவரனுக்கு 5,600 ரூபாய் குறைந்த நிலையில், இன்று நகைப்பிரியர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

தங்கம் விலை ஏறி இறங்க காரணம் என்ன.?

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 45 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கம் விலை தற்போது 1 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், திடீரென ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாய்க்கு சரிந்தது. அந்த அளவிற்கு தங்கத்தின் விலையானது சரிய பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக டாலரின் மதிப்பிற்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கை வாங்கி குவித்தது தங்கம் விலை உயர காரணம் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தனர்.

குறைந்த தங்கம் விலை- திடீரென அதிகரிக்க காரணம் என்ன.?

இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக ஈரான்- அமெரிக்கா இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதனையடுத்து கச்சா எண்ணெய்யின் விலையானது தொடர்ந்து உயர்ந்தது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என தங்கத்திற்கு பதிலான கச்சா எண்ணெய் மீது தங்களது முதலீடுகள் அதிகரித்தனர். இதனால் தங்கம் விலையானது குறைய தொடங்கியது. இந்த சூழ்நிலையில் நேற்று இரவு திடீரென அமெரிக்கா- ஈரான் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக அதிபர் ட்ரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இதனால் முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய்க்கு பதிலாக தங்கத்தில் முதலீட்டை அதிகரித்தால் இன்றைய தினம் தங்கம் விலையானது உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் கிராமுக்கு 300 ரூபாய் அதிகரித்து 13,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 2400 ரூபாய் அதிகரித்து 1,10,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதே போல வெள்ளியின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 265 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி