📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 28, 2026 03:00 AM

GOLD SILVER RATE: நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.! இன்று மாலையிலும் சரிந்த தங்கம் விலை

GOLD SILVER RATE: நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.! இன்று மாலையிலும் சரிந்த தங்கம் விலை

GOLD SILVER RATE: நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.! இன்று மாலையிலும் சரிந்த தங்கம் விலை; ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ள நிலையில், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து மகிழ்ச்சி அளித்த நிலையில், மாலையில் மேலும் 400 ரூபாய் குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

தங்கத்தில் தொடரும் முதலீடுகள்

தங்கத்தின் மீதான முதலீடு எப்போதும் இல்லாத வகையில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2025-ம் ஆண்டு தொடக்கத்தில் ஒரு சவரன் 50,000 ரூபாயை கடந்த நிலையில், தற்போது 1.34 லட்சம் ரூபாயை எட்டி, நகைப்பிரியர்களை கதற விட்டுள்ளது. இதற்கு, பல்வேறு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற போர் முக்கிய காரணமாக கூறப்பட்டது. மேலும், டாலருக்கு இணையாக மற்ற நாடுகள் தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில், மத்திய வங்கிகள் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்ததும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

தங்கத்தை வாங்க முடியாமல் தவிக்கும் மக்கள்

தங்கத்தினை விலையானது புதிய உச்சத்தை தொட்டதால், நடுத்தர வர்க்க மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தான், அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் காரணமாக, திடீரென முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக, கச்சா எண்ணெய் மீது கவனத்தை திருப்பியதால், திடீரென தங்கம் விலை சவரனுக்கு ஒரு லட்சத்திற்கு சரிந்தது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்து வருகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், இன்று தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, இன்று காலை தங்கம் கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் குறைந்து, 13,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 1,11,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மாலையில் மீண்டும் கிராமிற்கு 50 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் விலை குறைந்து, ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று மாலையில் குறைந்துள்ளது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து, 260 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.