📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 29, 2026 10:00 AM

GOLD SILVER RATE: மாலையில் திடீரென அதிர்ச்சி கொடுத்த தங்கம் இப்படி அதிரடியா கூடிடுச்சே.!

GOLD SILVER RATE: மாலையில் திடீரென அதிர்ச்சி கொடுத்த தங்கம் இப்படி அதிரடியா கூடிடுச்சே.!

GOLD SILVER RATE: மாலையில் திடீரென அதிர்ச்சி கொடுத்த தங்கம்; இப்படி அதிரடியா கூடிடுச்சே.! தற்போது விலை என்ன.?

தங்கத்தின் விலை சமீபத்தில் குறைந்துவந்த நிலையில், இன்று காலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் மாலையில் திடீரென அதிரடியாக விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. தங்கம் வெள்ளியின் விலை நிலவரத்தை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் மாற்றமின்றி தொடர்ந்தது. முன்னதாக நேற்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு 1,600 ரூபாய் விலை குறைந்தது. ஆனால், இன்று மாலையில் அதே அளவிற்கு விலை உயர்ந்து தங்கம் வாங்குவோருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு

பொன்னிலும், நிலத்திலும் முதலீடு செய்வது எப்போதும் நஷ்டம் ஏற்படுத்தாது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலானவர்கள் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கிறார்கள். தங்களின் அவரச தேவைக்கு உடனடியாக தங்க நகைகளை விற்கவோ, அடகு வைக்கவோ முடியும். ஆனால் நிலத்தில் முதலீடு செய்தால் அவசர தேவைக்கு விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும். இதனாலே தங்கத்தில் நடுத்தர வர்க்க மக்கள் முதல் உயர் வகுப்பு மக்கள் வரை அதிகளவு முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்.

தங்கம் விலை உயர்விற்கு காரணம் என்ன.?

டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் அதிகளவு தங்கங்களை வாங்கி குவிக்கிறார்கள். இதனால் தங்கம் விலையானது அதிகரித்து வருகிறது. மேலும் உலக நாடுகளில் நடைபெறும் போர் பதற்றமும் பங்கு சந்தையில் முதலீடு செய்வதை தவிர்த்து பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை பார்ப்பதால் அதிகளவு தங்கத்தின் மீது முதலீட்டை செய்து வருகிறார்கள். இதன் காரணமாகவே கடந்த ஒரு வருடத்தில் மட்டும் தங்கத்தின் விலையானது சவரன் 60ஆயிரம் ரூபாயில் இருந்து 1.34 லட்சத்தை எட்டி நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

ஏறி இறங்கும் தங்கம் விலை

இன்றைய தங்கம் விலை

கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலையானது சவரனுக்கு 2640 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இன்று காலையில் தங்கத்தின் விலையின் எந்தவித மாற்றமும் இன்றி நேற்றைய விலையான கிராமுக்கு 13,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால், மாலையில் சவரனுக்கு 1,600 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 200 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,100 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,12,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையும் இன்று காலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையான ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் கிராமிற்கு 10 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 270 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.