GOLD SILVER RATE Apr. 13th: சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை தற்போது
GOLD SILVER RATE Apr. 13th: சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?

Gold Silver Rates Today: வாரத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. தற்போதை விலை நிலவரம் என்ன.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தில் தொடக்கத்தில் இருந்ததைவிட, வார இறுதியில் ஏறுமுகத்திலேயே முடிந்தது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. அதேபோல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

கடந்த வார இறுதியில் உயர்ந்து காணப்பட்ட தங்கம் விலை

தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்ததைவிட, வார இறுதியில் உயர்ந்து காணப்பட்டது. அதன்படி,

இன்று விலை குறைந்த தங்கம்

இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 40 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,060 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,12,480 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை கடந்த வாரத்தில் பெரிய அளவில் மாற்றமில்லாமல், சின்ன சின்ன மாற்றங்களுடன் இருந்து வந்தது. அதன்படி,

இந்த நிலையில், இன்று வெள்ளியின் விலை கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாரத்தின் முதல் நாளிலேயே தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறைந்துள்ளதால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.