GOLD SILVER RATE: அச்சச்சோ.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன
GOLD SILVER RATE: அச்சச்சோ.! ரூ.5000 கூடிடுச்சே.! தங்கம், வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Gold Silver Rate May 8th: சென்னையில் வெள்ளியின் விலை இன்று கிலோவிற்கு 5,000 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஆறுதல் அளிக்கும் விதமாக எந்தவித மாற்றமுமின்றி விற்பனையாகிறது. அதே நேரத்தில் வெள்ளி விலை கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.
தங்கத்தில் அதிகரிக்கும் முதலீடு
தங்கத்தின் மீதான முதலீடு எப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திருமண நிகழ்வுகள், தீபாவளி பண்டிகையின் போது தங்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதிலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகளவு தங்கம் வாங்கப்படுகிறது. எனவே தங்கத்தில் முதலீடு செய்தால் எப்போதும் இழப்பு வராது என்ற காரணத்தால் அதிகளவு முதலீடு செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக அத்தியாவசிய தேவைக்கு தங்கம் பெரும் உதவியாக உள்ளது. மருத்துவம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு உடனடியாக பணம் தேவைக்கு தங்க நகைகளை விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ முடியும். எனவே நடுத்தர வர்க்க மக்கள் தங்காளல் முடிந்த அளவு தங்கத்தை வாங்கி வருகிறார்கள்.
தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?
டாலருக்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்ற காரணத்தால் மத்திய வங்கிகள் டன் கணக்கில் தங்கத்தை வாங்கி குவித்தது. இதனால் தங்கத்திற்கு அதிகளவு டிமாண்ட் ஏற்பட்டதையடுத்து தங்கத்தின் விலையானது அதிகரித்து வந்தது. அடுத்தாக ஈரான்- அமெரிக்கா போர் காரணமாகவும் தங்கம் விலையானது உயர்வை சந்தித்துள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கம் விலை
இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை எந்தவித மாற்றமும் இன்றி, ஒரு கிராம் 14,150 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நிலவரம்
இதனிடையே, வெள்ளியின் விலை இன்று கிராமிற்கு 5 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.