GOLD SILVER RATE Mar. 21st: அடேங்கப்பா.! தங்கம் இப்படி அதிரடி காட்டிடுச்சே.! ஒரே நாள்ல இவ்ளோ விலை
GOLD SILVER RATE Mar. 21st: அடேங்கப்பா.! தங்கம் இப்படி அதிரடி காட்டிடுச்சே.! ஒரே நாள்ல இவ்ளோ விலை குறைவா.? இன்று எவ்வளவு.?

சில நாட்களாக குறைந்து வந்து, பின்னர் நேற்று விலை உயர்ந்த தங்கம், இன்று அதிரடியாக விலை குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 15-ம் தேதி முதல் குறைந்து வந்த நிலையில், நேற்று சற்று விலை உயர்ந்தது. ஆனால், இன்று அதிரடியாக விலை குறைந்து பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

ஒரே நாளில் அதிரடி குறைவு - இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்

தங்கத்தின் விலை கடந்த 15-ம் தேதி கிராம் 14,760 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,18,080 ரூபாயாகவும் இருந்தது. 16-ம் தேதி விலை குறைந்து, ஒரு கிராம் 14,710 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,17,680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

17-ம் தேதி மேலும் விலை குறைந்து, ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 18-ம் தேதி மீண்டும் விலை குறைந்து, ஒரு கிராம் 14,570 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,560 ரூபாய்க்கும் விற்பனையானது.

19-ம் தேதி ஒரே நாளில் இரு முறை மிகப்பெரிய அதிரடி விலை குறைப்பை கண்ட தங்கம், ஒரு கிராம் 13,900 ரூபாய்க்கு சரிந்தது. ஒரு சவரன் 1,11,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 20-ம் தேதியான நேற்று சற்று விலை உயர்ந்து, ஒரு கிரம் 13,950 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,11,600 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இச்சூழலில், இன்று அதிரடியாக சவரனுக்கு 2,640 ரூபாய் விலை குறைந்துள்ளது.

இன்று அதிரடியாக விலை குறைந்த தங்கம்

அதன்படி இன்று கிராமிற்கு 330 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 13,620 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,08,960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இன்று தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிராமிற்கு ரூ.10 குறைந்த வெள்ளி

இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. கடந்த 15-ம் தேதி கிராம் 280 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 16-ம் தேதி விலை குறைந்து 276 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

17-ம் தேதி சற்று விலை உயர்ந்து, கிராம் மீண்டும் 280 ரூபாய்க்கு உயர்ந்தது. ஆனால், 18-ம் தேதி விலை குறைந்து கிராம் 275 ரூபாய்க்கு வந்தது. பின்னர் 19-ம் தேதி மேலும் விலை குறைந்து, ஒரு கிராம் 265 ரூபாய்க்கு இறங்கியது.

20-ம் தேதியான நேற்றும் விலை குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று கிராமிற்கு மேலும் 10 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.