GOLD SILVER RATE MAR. 23rd: மெகா ட்விஸ்ட் கொடுத்த தங்கம் பகலில் ரூ.7,600 குறைந்து மாலையில் அதிரடி
GOLD SILVER RATE MAR. 23rd: மெகா ட்விஸ்ட் கொடுத்த தங்கம்; பகலில் ரூ.7,600 குறைந்து மாலையில் அதிரடி உயர்வு; தற்போது விலை என்ன.?

தங்கத்தின் விலை இன்று காலை மற்றும் பிற்பகல் என 2 முறை 7,600 ரூபாய் விலை குறைந்த நிலையில், மாலையில் அதிரடியாக விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஜனவரி மாதம் இறுதியில் ஒரு சவரன் 1.34 லட்சத்திற்கு விற்பனையானது. இதனால் நடுத்தர வர்க்க மக்களால் தங்க நகைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தங்கத்தின் விலை எப்போது குறையும் என காத்திருந்த மக்களுக்கு, ஜாக்பாட் அடித்தது. ஆம், ஈரான்- இஸ்ரேல் போர் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் தங்கம் விலையானது சரிந்து வந்தது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை குறைந்தது. இதனால் நகைக்கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

தங்கம் விலை குறைந்தது எதனால்.?

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்ட போர் காரணமாக, முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு மேற்கொள்ளாமல், கச்சா எண்ணெய் மீது அதிகளவில் முதலீடு செய்து வருவதால், தங்கம் விலையானது சரிந்ததாக கூறப்படுகிறது. மேலும், போர் தொடர்ந்தால் இன்னும் சில நாட்களுக்கு தங்கத்தின் விலை சரிய வாய்ப்பு இருப்பதாக நகை வியாபாரிகள் தெரிவித்திருந்தனர்.

தங்கம் விலை நிலவரம்

இருமுறை குறைந்த தங்கம் விலை

தங்கத்தின் விலையானது காலையில் சவரனுக்கு 5,360 ரூபாய் குறைந்த நிலையில், மாலையிலும் தங்கம் விலை சரிந்தது. அதன்படி, இன்று ஒரே நாளில் 7,600 ரூபாய் அளவிற்கு சரிந்து, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. மொத்தமாக இன்று காலை மற்றும் பிற்பகலில் விலை குறைந்து, ஒரே நாளில் கிராமுக்கு 950 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 12,670 ரூபாய்க்கும், சவரனுக்கு 7,600 ரூபாய் குறைந்து, ஒரு சரவன் 1,01,360 ரூபாய்க்கும் விற்பனையானது.

மாலையில் ட்விஸ்ட் அடித்த தங்கம் விலை - அதிரடி உயர்வு

இந்த சூழலில், மாலையில் திடீரென தங்கத்தின் விலை பெரும் அளவில் உயர்ந்தது. அதன்படி, மாலையில் கிராமிற்கு 670 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் 13,340 ரூபாய்க்கு எகிறியது. சவரனுக்கு 5,360 ரூபாய் அதிகரித்து, 1,06,720 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் போரால் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று மாலையில் திடீரென ஈரான் மீதான தாக்குதலை 5 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனால், தங்கத்தின் விலை திடீரென மாலையில் உயர்ந்திருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும், அடுத்து வரும் நாட்களிலும் விலை உயர்வு இருக்குமோ என்று பொதுமக்களிடையே அச்சம் எழுந்துள்ளது.

வெள்ளி விலையும் உயர்வு

இதேபோல், வெள்ளியின் விலையும் இன்று மாலையில் கிராமிற்கு 15 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று காலையில் கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 235 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், மாலையில் மீண்டும் 15 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.