Gold Silver Rate May 15th: ஆஹா.! மாலையிலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாள்ல இவ்வளவு
Gold Silver Rate May 15th: ஆஹா.! மாலையிலும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.! ஒரே நாள்ல இவ்வளவு குறைவா.? இப்போ எவ்வளவு.?

தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்த நிலையில், மாலையிலும் அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. இந்நிலையில், மாலையில் மீண்டும் அதிரடியாக சவரனுக்கு 1,480 ரூபாய் குறைந்து, இன்று ஒரே நாளில் 2,280 ரூபாய் குறைந்து, தங்கம் வாங்குவோருக்கு ஆறுதல் அளித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.

தங்கத்தில் தொடரும் முதலீடு

தங்கம் ஆடம்பர பொருளாக இருந்தாலும் இந்திய மக்களிடம் அதிகளவு தங்க நகைகள் மீது ஈர்ப்புள்ளது. இதன் காரணமாக திருமணம், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் தங்க நகைகளின் விலை உயர்ந்தாலும் நகைக்கடைகளில் கூட்டமானது எப்போதும் அதிகரித்தே காணப்படுகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. அடுத்த 6 வருடங்களில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டி நடுத்தர வர்க்க மக்களை தலை சுற்றவைத்துள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் முதலீடு செய்தால் பாதுகாப்பானது என மக்கள் அதிகளவு தங்கத்தை வாங்கி வருகிளார்கள்.

தங்கம் விலை 2 லட்சம் ரூபாயை எட்டும்

தங்கம் விலையானது தற்போது ஏறி இறங்கி வரும் நிலையில், அடுத்த ஒரு வருடத்திற்கு தங்கத்தை வாங்க வேண்டாம் என பிரதமர் மோடி பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம் வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் முக்கிய காரணமாக பாரக்கப்படுகிறது,. தங்கத்தை டாலர் மதிப்பிலேயே வாங்கப்படுவதால் இந்திய பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தவே தங்க நகைகள் மீது 15% வரியானது விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தங்கம் விலை புதிய புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் ஒரு சவரன் 2 லட்சத்தை எட்டும் என நகை வியாபாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில், இன்று காலை கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 14,950 ரூபாய்க்கும், சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 1,19,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மாலையில் மீண்டும் சவரனுக்கு 1,480 ரூபாய் குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 185 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,765 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,18,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம், தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 2,280 ரூபாய் குறைந்து பொதுமக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை

இதே போல வெள்ளி விலையானது இன்று காலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 305 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலையில் எந்த மாற்றமுமின்றி அதே விலையில் நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.