📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 25, 2026 10:30 AM

Gold Silver Rate May 25th: வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை இப்போது

Gold Silver Rate May 25th: வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை இப்போது

Gold Silver Rate May 25th: வாரத்தின் முதல் நாளே ஷாக்.! ஏறுமுகத்திற்கு மாறிய தங்கம் விலை; இப்போது எவ்வளவு தெரியுமா.?

Gold Silver Rate Today: கடந்த வாரத்தின் இறுதியில் குறைந்திருந்த தங்கத்தின் விலை, இந்த வாரத்தின் முதல் நாளிலேயே அதிகரித்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

கடந்த வாரத்தின் இறுதியில், அதாவது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தொடர்ந்து குறைந்த தங்கத்தின் விலை, வாரத்தின் முதல் நாளான இன்று, சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

தங்கம் மீதான ஈர்ப்பு இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் இந்திய திருமணங்களில் தங்கத்திற்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். பல குடும்பங்களில் பெண்களின் நகைகள் அவர்களின் சொந்த சொத்தாகக் கருதப்படுகின்றன. இதனால் திருமண நிகழ்வுகள், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் அதிகளவு தங்க நகைகளை இந்திய மக்கள் வாங்கி வருகிறார்கள். மேலும் மருத்துவம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு தங்கம் ஒரு சிறந்த ஒரு அட்ஷய பாத்திரமாகவே உள்ளதால் தேவையான நேரத்திற்கு தங்க நகைகளை விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ பெரிதும் உதவியாக உள்ளது.

தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்ன.?

உலக அளவில் போர்கள், வர்த்தகப் போட்டிகள், அமெரிக்க-சீனா, மத்திய கிழக்கு மோதல்கள், ஈரான் தொடர்பான பதற்றங்கள் போன்ற காரணமாக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு என தங்கத்தை நோக்கி ஓடுகின்றனர். சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் டாலர் மீதான சார்பை குறைக்கும் வகையில் தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகின்றன இது தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

தங்கத்தின் இன்றைய விலை

இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 50 ரூபாய் உயர்ந்து, 14,780 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து 1,18,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை

இந்நிலையில், வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி, கிராம் 295 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.