📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 28, 2026 11:30 AM

Gold Silver Rate May 28th: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக

Gold Silver Rate May 28th: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக

Gold Silver Rate May 28th: நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்.! இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக குறைவு; தற்போது விலை என்ன.?

Gold Silver Rate Today: தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில், இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளியின் விலையும் குறைந்த நிலையில், தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு 1,200 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமிற்கு 5 ரூபாய் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

தங்கத்தின் மீதான ஈர்ப்பு

ஏறி இறங்கும் தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த 5 வருடங்களில் இமாலய உயரத்தை தொட்டுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 முதல் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான தங்கத்தின் விலையானது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் 1.34 லட்சத்தை எட்டியது. இதனையடுத்து தங்கத்தின் விலையானது படிப்படியாக குறைந்து தற்போது 1.17ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலையானது இந்தாண்டு இறுதிக்குள் 2 லட்சம் ரூபாயை எட்ட வாய்ப்பு இருப்பதாக தங்க நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து 14,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 1,16,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இன்றும் குறைந்த வெள்ளி விலை

இதே போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 285 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளிக்கு 5000 ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.