📅 Thursday, 27 August 2026 IST | ஆவணி 11, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business August 27, 2026 04:02 PM

Gold Silver Rate Today Aug.27th: ஐ..ஜாலி.! சரிவை நோக்கி தங்கம் விலை.! இன்று பிற்பகலில் அதிரடியாக குறைந்தது

Gold Silver Rate Today Aug.27th: ஐ..ஜாலி.! சரிவை நோக்கி தங்கம் விலை.! இன்று பிற்பகலில் அதிரடியாக குறைந்தது

Gold Silver Rate Today Aug.27th: ஐ..ஜாலி.! சரிவை நோக்கி தங்கம் விலை.! இன்று பிற்பகலில் அதிரடியாக குறைந்தது; தற்போதைய விலை என்ன.?

தங்கத்தின் விலை இன்று காலையில் கணிசமான அளவு குறைந்த நிலையில், பிற்பகலில் அதிரடியாக விலை குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் கணிசமாக குறைந்தது. இந்த நிலையில், பிற்பகலில் அதிரடியாக சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து, நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

சமீபத்திய தங்கம் விலை நிலவரம்

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன் தினம் சற்று குறைந்தது. நேற்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று காலையில், தங்கத்தின் விலையானது கணிசமாக குறைந்தது.

அதன்படி, கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,940 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,19,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், பிற்பகலில் அதிரடியாக கிராமிற்கு மேலும் 215 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,725 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து 1,21,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை என்ன.?

வெள்ளி விலையானது நேற்றைய தினம் போலவே இன்று எந்த வித மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி