📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 25, 2026 04:30 AM

Gold Silver Rate Today Feb.13: பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.! இன்றும் அதிரடியாக விலை குறைந்த

Gold Silver Rate Today Feb.13: பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.! இன்றும் அதிரடியாக விலை குறைந்த

Gold Silver Rate Today Feb.13: பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி.! இன்றும் அதிரடியாக விலை குறைந்த தங்கம்.! எவ்வளவு தெரியுமா.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் நேற்றைவிட கணிசமான அளவில் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரங்களை இப்போது பார்க்கலாம்.

தங்கத்தின் விலை நேற்று கணிசமாக குறைந்த நிலையில், இன்று அதைவிட அதிகமான அளவில் குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரத்தை இப்போது பார்க்கலாம்.

இன்றும் கணிசமாக விலை குறைந்த தங்கம்

தங்கத்தின் விலை நேற்று கணிசமாக குறைந்த நிலையில், இன்று அதைவிட அதிக அளவில் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வார இறுதியில், அதாவது 8-ம் தேதி கிராம் 14,420 ரூபாயாகவும், ஒரு சவரன் 1,15,360 ரூபாயாகவும் இருந்தது. ஆனால், 9-ம் தேதியான திங்கட் கிழமை அதிரடியாக விலை உயர்வை சந்தித்தது. அதன்படி, அன்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 14,650 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், 10-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 14,580 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,16,640 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர், 11-ம் தேதியான நேற்று மீண்டும் அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,790 ரூபாய்க்கும், ஒரு சவரன் தங்கம் 1,18,320 ரூபாய்க்கும் எகிறிது.

பின்னர், 12-ம் தேதியான நேற்று கிராமிற்கு 190 ரூபாய் விலை குறைந்து ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்படி, சவரனுக்கு 1,520 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,16,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை என்ன.?

இந்த சூழலில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, கிரமிற்கு 200 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 14,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,15,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை இதேபோல் தொடர்ந்து குறைந்தால் நன்றாக இருக்கும் என்பதே பொதுமக்களின் எண்ணமாக உள்ளது.

கிராமிற்கு 20 ரூபாய் குறைந்த வெள்ளி

இதனிடையே, வெள்ளி விலை இன்று கிராமிற்கு 20 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த 8-ம் தேதி வெள்ளியின் விலை 285 ரூபாயாக இருந்தது. தொடர்ந்து, 9-ம் தேதியான திங்கட் கிழமை, கிராமிற்க 15 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை தொடர்ந்து அதே விலையில் நீடித்து வந்தது. அதன்படி, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், வெள்ளியின் விலை இன்று கிராமிற்கு 20 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே சிறிய மாற்றங்களுடன் கிட்டத்தட்ட இதே விலையில் நீடித்து வருகிறது.