I'M Game Blue Sattai Maran Review
சென்னை: நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஐ அம் கேம். நேற்று மலையாளத்தில் வெளியான சூழலில் இன்று தமிழிலும் வெளியாகவிருக்கிறது. படம் ஓரளவுக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸை பெற்றிருக்கும் சூழலில்; பிரபல திரை விமர்சகரான ப்ளூ ச்ட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார்.
துல்கர் சல்மானுக்கு கடந்த சில வருடங்களாக கிராஃப் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது. லக்கி பாஸ்கர் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதனைத் தொடர்ந்து வந்த காந்தா, சாம்பியன் ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றன. இப்போது அவர் ஐ அம் கேம் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். நஹாஸ் ஹிதாயத் இப்படத்தை இயக்கியிருக்கிறார். நேற்றே மலையாளம் மற்றும் தமிழில் வெளியாவதாக இருந்தது.
I'm Game ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: ஆனால் தமிழில் சில காரணங்களால் இன்று ரிலீஸாகிறது. இந்நிலையில் I'm Game படம் பற்றி பிரபல திரை விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் தன்னுடைய வீடியோவில், "படத்தின் ஹீரோ பெரிய இடத்து பையன். அதனாலேயே அவருக்கு நல்ல தொழிலை வீட்டில் அமைத்து கொடுக்கிறார்கள். ஆனால் அவருக்கு தொழிலில் ஆர்வம் இல்லை. சூதாட்டத்தில்தான் ஆர்வம்.பெரிய தொகையை இழந்து மூன்று கோடி ரூபாயை கடன் வாங்குகிறார். அவருக்கு தற்செயலாக கொஞ்சம் பணம் கிடைக்கிறது.
என்ன கதை?: அதை வைத்தும் சூதாடுகிறார். அதுவும் போய்விடுகிறது. பிறகு அங்கிருந்து கிளம்பி விபத்தில் சிக்குகிறார். அதில் வலது கை டேமேஜ் ஆகிவிட்டது. அவருக்கு கை மாற்று அறுவை சிகிச்சை செய்கிறார்கள். ஒருகட்டத்தில் அந்தக் கை இஷ்டத்துக்கு செயல்படுகிறது. மூளை சொல்வதை கேட்பதில்லை. ஏன் என்று பார்த்தால் இந்த கைக்கு சொந்தமானவர் சொல்வதைத்தான் அந்த கை கேட்கிறது. அந்த கைக்கு சொந்தக்காரர் யார்? அவருக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம் என்பது கதை.
ரொம்ப நல்லா போச்சு: இந்தப் படம் மொத்தம் மூன்று மணி நேரம் ஓடுகிறது. அதில் முக்கால் மணி நேரம் ரொம்பவே நன்றாக போய்விட்டது. எப்போது அவருக்கு கை கண்டமானதோ அங்கேயே படம் படுத்துவிட்டது. அதற்கு பிறகு வழக்கமான சினிமாவில் என்ன நடக்குமோ அதெல்லாம் நடந்துவிட்டது. ஹீரோ என்று ஒருவர் இருந்தால் ஹீரோயின் என்று ஒருவர் இருக்க வேண்டும்தானே; அப்படி கயாடு வருகிறார்.
மேம்போக்கான ரைட்டிங்: கார்ப்பரேட் வில்லனாக ஒருவரை காண்பிக்கிறார்கள். அவர் கார்ப்பரேட் லெவலில் யோசிப்பார் என்று பார்த்தால் பேட்ட ரவுடி மாதிரி சண்டை போடுகிறார். இதில் எந்த கேரக்டரும் சரியாக வடிவமைக்கப்படவில்லை. எல்லாமே மேம்போக்கான ரைட்டிங்தான். ஒரு கிரிக்கெட் போர்ஷன் வருகிறது. அரை மணி நேரம் வரும் அந்த போர்ஷனில் கிரிக்கெட்டை வைத்தே விளையாண்டிருக்கலாம். ஆனால் உப்பு சப்பில்லாமல் போய்விட்டது.
மசாலா படம்: படம் டெக்னிக்கலாக நன்றாக இருந்தது. துல்கர் சல்மான் அவருடன் அவரே சண்டை போடும்படி ஒரு காட்சி வரும். அது ரொம்பவே நன்றாக இருந்தது. இந்த மொக்கையான கதை, திரைக்கதையை ஓரளவுக்கு பார்க்க வைத்தது மேக்கிங்தான். கதையில் அடுத்தது இதுதான் நடக்கப்போகிறது என்பது யூகிக்கும்படிதான் இருக்கிறது. ரொம்ப சாதாரணமா போச்சு. தமிழில்தான் மசாலா படம் எடுக்கிறார்களே என்று மலையாளம் பக்கம் போனால்; அங்கேயும் இதே மாதிரி எடுத்து வைத்திருக்கிறார்கள். நீங்களுமா டா என்றுதான் கேட்க தோன்றுகிறது" என்றார்.