📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 04, 2026 01:01 PM

மமிதா பைஜூ மிரட்டல்.. ஹீரோக்களே திணறும் 200 கோடி கிளப்.. அடுத்தடுத்து சாதித்த டாப் ஹீரோயின்!

மமிதா பைஜூ மிரட்டல்.. ஹீரோக்களே திணறும் 200 கோடி கிளப்.. அடுத்தடுத்து சாதித்த டாப் ஹீரோயின்!

சென்னை: மமிதா பைஜூ தென்னிந்திய சினிமாவில் இப்போது டாப் ஹீரோயின்கள் ரேஸில் முன்னணியில் இருக்கிறார். கண்டிப்பாக அவரது அலை இன்னும் பல வருடங்களுக்கு அடிக்கும் என்று நம்பலாம். சூழல் இப்படி இருக்க; ஹீரோக்களே 200 கோடி ரூபாய் வசூல் செய்யும் படங்களை தேர்ந்தெடுப்பதில் சிக்கலை சந்திக்கும் நிலையில் அவர் அதை அசலாட்டாக செய்திருக்கிறார்.

பிருத்விராஜின் பாவாடா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மமிதா பைஜூ. பிறகு சினிமாவில் தொடர்ந்து நடித்த அவருக்கு ஹீரோயினாக பிரேமலு திரைப்படம் மிகப்பெரிய வெளிச்சத்தை கொடுத்தது. அதில் அவரது அழகும், நடிப்பும் அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக அவரது எஸ்க்பிரெஷன்ஸ் எல்லாம் பலரையும் ஈர்த்து; தென்னிந்திய இன்டஸ்ட்ரிக்கு ஒரு நஸ்ரியா மீண்டும் கிடைத்துவிட்டார் என்று கொண்டாடினார்கள். ஏனெனில் நஸ்ரியாவும் எக்ஸ்பிரெஷன் குயின் என்று ரசிகர்களிடம் பட்டம் வாங்கியவர்.

தமிழில் மமிதா: தொடர்ந்து அவருக்கு தமிழில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. முதலில் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை பாலா இயக்கியபோது அதில் மமிதாவும் நடித்திருந்தார். திடீரென அதிலிருந்து வெளியேறிவிட்டார். வெளியேறிய கையோடு ஒரு பேட்டி கொடுத்த அவர், 'பாலா தன்னை அடிப்பார்' என்றும் கூறிவிட்டார். அது அப்போதைக்கு பெரிய சர்ச்சையை உருவாக்கியது.

காலப்போக்கில் அதெல்லாம் மறைந்து மலையாளத்தில் படு பிஸியாகிவிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழில் கர படத்தில் அறிமுகமானார். முதல் படமே தோல்வி. நேஷனல் க்ரஷ் என்று பெயர் எடுத்தாலும் ராஷ்மிகா எப்படி தமிழில் கோலோச்ச முடியாமல் இருக்கிறாரோ? அதேபோல் மமிதாவும் ஆவார் என்று ஆரூடம் கூறினார்கள். ஆனால் அவரோ அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் நடித்து; இங்கேயும் முன்னணி ஹீரோயின் ரேஸில் முந்திக்கொண்டிருக்கிறார்.

மூன்று படங்கள்: கர படத்துக்கு பிறகு விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் நடித்தார். விஜய்யின் கடைசி படம், விஜய் சி.எம் ஆன பிறகு ரிலீஸான படம் என அது ஏகப்பட்ட விஷயங்களை சந்தித்தது. அப்படத்தில் மமிதா ஏற்றிருந்த பாத்திரம் முழுவதும் கனெக்ட் ஆகிவிட; அவருக்கு ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. அப்படியே கட் செய்தால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஹீரோயினாக நடித்தார்.

ராதிகாவின் பாராட்டு: நடிப்பில் சிகரம் தொடும் ராதிகாவே, மமிதாவின் நடிப்பை வியந்து பாராட்டினார். படம் முழுக்க மமிதா தன்னுடைய நடிப்பாலும், க்யூட் க்யூட் ரியாக்‌ஷன்களிலும் புகுந்து விளையாடி ஸ்கோர் செய்துவிட்டார். அந்த வெற்றிக்கு பிறகு நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்த பெத்லேகம் படத்திலும் தனது அசத்தல் பெர்ஃபார்மென்ஸை போட்டிருக்கிறார்.

பாக்ஸ் ஆஃபிஸ் ராணி: அந்த மூன்று படங்களுமே மமிதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கின்றன. விமர்சன ரீதியாக மட்டுமின்றி பாக்ஸ் ஆஃபிஸிலும் அவரை ராணி அந்தஸ்துக்கு உயர்த்தியுள்ளன. வரிசையாக அடுத்தடுத்து 200 கோடி ரூபாய் வசூலை ஹீரோக்களே தட்ட முடியாமல் தவிக்கும் நிலையில் மமிதா அதனை செய்திருக்கிறார்.

தன்னை சுற்றி என்ன நடந்தாலும் தன்னுடைய நோக்கம் நடிப்பதிலும், அதற்காக வேலைகள் செய்வதும்தான் என்பதில் உறுதியாக இருப்பதால்தான் அவரால் சிறந்த கதைகளை தேர்ந்தெடுக்கவும், சில கதைகளை சிறந்தவைகளாக தன்னுடைய நடிப்பின் மூலம் மாற்றவும் முடிந்திருக்கிறது. ராஷ்மிகா மந்தனாவுக்கு பிறகு மமிதா தொடர்ச்சியாக 200 கோடி ரூபாயை வசூலித்த படங்களில் நடித்த பெருமையை பெற்றாலும்; ராஷ்மிகாவால் கோலோச்ச முடியாத கோலிவுட்டிலும் தன்னுடைய தடத்தை ஆழமாக பதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.