📅 Wednesday, 18 November 2026 IST | கார்த்திகை 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 15, 2026 11:34 AM

இ20 பெட்ரோல், நிதின் கட்கரிக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு

இ20 பெட்ரோல், நிதின் கட்கரிக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது வழக்குப்பதிவு

நாக்பூர்: எத்தனால் கலந்த எரிபொருள் விவகாரத்தில் மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது நாக்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, போர் பதற்றங்களால் கச்சா எண்ணெய் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், இ20 பெட்ரோல் எனப்படும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் மத்திய அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. ஆனால், இ20 பெட்ரோலால் மைலேஜ் குறைவதாக சிலர் குற்றம்சாட்டி வருகின்றனர். மத்திய அரசும், 3 அல்லது 5 சதவீதம் வரை மைலேஜ் குறையும் என விளக்கம் அளித்து விட்டது.

இருப்பினும், இ20 பெட்ரோல் குறித்தும், அமைச்சர் நிதின் கட்கரி பற்றியும் சமூக வலைதளங்களில் சில அவதூறு பரப்பி வருகின்றனர். இந்த நிலையில், நாக்பூர் பாஜ நகர சமூக ஊடகப் பிரிவின் அமைப்பாளர் சிஷிர் அருண் திரிபாதி என்பவர் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இ20 பெட்ரோல் குறித்து அவதூறு பரப்புவதாக நாக்பூர் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அந்த மனுவில், மனிஷ் காஷ்யப் என்ற யூடியூபர் ஒருவர், அமைச்சர் நிதின் கட்கரி குறித்து அவதூறு பரப்பியும், இ20 பெட்ரோல் குறித்து தவறான கருத்துக்களையும் உள்ளடக்கிய வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இதேபோல, மேலும், யூடியூப் பக்கங்களும், இன்ஸ்டாகிராம் கணக்குகளின் பெயர்களை குறிப்பிட்டிருந்தார். பொது அமைதியைக் குலைக்கவும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் வகையில் அவர்களின் வீடியோக்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதன்பேரில், சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்கள் மீது நாக்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.