இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
இசையமைப்பாளர் இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: பதிப்புரிமை உத்தரவை மீறி பாடல்களை தொடர்ந்து பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிமன்றம் ஏற்கனவே விதித்த தடையை மீறி, இளையராஜா தொடர்ந்து பாடல்களுக்கு உரிமை கோரி வருவதாக கூறி சரிகம நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. 134 திரைப்படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ கூடாது என்ற நீதிமன்றத்தின் தடையை மீறி இளையராஜா தொடர்ந்து பாடல்களைப் பயன்படுத்தி உரிமை கொண்டாடியதாக சரிகம தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
நீதிமன்றத்தின் தடையுத்தரவை மீறி, இளையராஜா தரப்பில் 134 திரைப்படங்களின் பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவதாகச் சரிகம நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது. Spotify மற்றும் YouTube போன்ற தளங்களில் இன்னும் அந்தப் பாடல்கள் இளையராஜா சார்ந்த பக்கங்களில் நீடிப்பதாக ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன
நீதிமன்றத்தின் பதிப்புரிமை உத்தரவை மீறியுள்ள இளையராஜா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் சரிகம நிறுவனம் கோரியுள்ளது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், மனுதாரர் புகாருக்கு பதிலளிக்குமாறு இளையராஜாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.