📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 10, 2026 04:33 AM

ஈரான்

ஈரான்

புதுடெல்லி: ஈ​ரான்​-அமெரிக்கா போர் மற்​றும் சவுதி அரேபியா மீதான ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​களின் தாக்​குதல் காரண​மாக ஒரு பேரல் கச்சா எண்​ணெய் விலை மீண்​டும் 100 டாலரை தாண்டி உள்​ளது.

மத்​திய கிழக்​கில் தீவிர மடைந்து வரும் ஈரான்​-அமெரிக் கா இடையே​யான நேரடி ராணுவ மோதலும், அதன் நீட்​சியாக சவுதி அரேபி​யா​வின் முக்​கிய எண்​ணெய் உற்​பத்​தித் தளங்​கள் மீது ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்​சி​யாளர்​கள் நடத்​தி​யுள்ள அதிரடித் தாக்​குதல்​களும் உலகள​வில் பெரும் போர்ப் பதற்​றத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளன.

இந்த தாக்​குதல்​களின் எதிரொலி​யாக, சர்​வ​தேச சந்​தை​யில் கடந்த ஜூலை மாதத்​துக்​குப் பிறகு ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்​ணெய் விலை நேற்று மீண்​டும் 100 டாலரைத் தாண்டியது.

பின்​னர் அது சற்று குறைந்து ஒரு பேரலுக்கு 99.90 டால​ராக சரிந்​தா​லும், மத்​திய கிழக்​கில் புதிய பதற்​றங்​கள் உரு​வா​னால் விலை மீண்​டும் அதி​கரிக்​கும் அபா​யம் உள்​ளது. ஈரான்​-அமெரிக்கா போர் தொடங்​கிய​திலிருந்து எண்​ணெய் விலை ஏற்ற இறக்​கத்​துடன் இருந்து வரு​கின்​றன.

வாகன ஓட்​டிகள் பாதிப்பு

மேலும் பரந்த பிராந்​திய ஸ்திரத்​தன்​மை​யின்​மை​யால் எண்​ணெய் துறை மீதான அழுத்​தம் மேலும் அதி​கரித்​துள்​ளது. கச்சா எண்​ணெய் விலை உயர்வு உலகெங்​கிலும் உள்ள வாகன ஓட்​டிகளுக்கு பெட்​ரோல் விலை​யில்​ பெரும்​ பா​திப்​பை ஏற்​படுத்​தி​யுள்​ளன.