📅 Saturday, 06 June 2026 IST | வைகாசி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News June 06, 2026 04:00 PM

ஈரான் ஏவிய வானூர்திகளைச் சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்

ஈரான் ஏவிய வானூர்திகளைச் சுட்டு வீழ்த்திய அமெரிக்க ராணுவம்

துபாய்/வாஷிங்டன்: அமெரிக்க ராணுவம், ஈரானியக் கடலோரக் கண்காணிப்புத் தளங்களின்மீது சனிக்கிழமை (ஜூன் 5) தனது படையினர் தாக்குதல் நடத்தி இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையை நோக்கி ஈரான் ஏவிய ஆளில்லா வானூர்திகளைச் (ட்ரோன்) சுட்டு வீழ்த்தியதாக அது குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தாக்குதல், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சிகளைச் சிக்கலாக்கும் எனக் கூறப்படுகிறது.

வட்டாரக் கடல்வழிப் போக்குவரத்தைக் குறிவைத்து நான்கு வானூர்திகளை ஈரான் ஏவியதாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.

அதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள கோருக், கெஷ்ம் தீவுகளில் உள்ள ஈரானின் கண்காணிப்புத் தளங்கள்மீது தனது படையினர் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா மத்திய தலைமையகம், ‘எக்ஸ்’ பதிவில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டுவர ஓர் இடைக்கால உடன்பாட்டை எட்ட, அமெரிக்காவும் ஈரானும் மறைமுகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்து மேற்கொண்டு பேச்சு நடத்த இருப்பதால் உடன்பாட்டில் அந்த அம்சம் இடம்பெறாது என்று கூறப்படுகிறது.

அதிகரித்துவரும் எரிவாயு விலைகள் காரணமாக இந்தப் போரை அமெரிக்க மக்கள் விரும்பவில்லை. எனவே போரை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என உள்நாட்டில் அதிகரித்துவரும் அழுத்தத்தை அதிபர் டோனல்ட் டிரம்ப் எதிர்நோக்கி வருகிறார்.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், அதிகரித்துவரும் எரிவாயு விலைகள் காரணமாக, மக்கள் விரும்பாத இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற அதிகரித்துவரும் உள்நாட்டு அரசியல் அழுத்தத்தை எதிர்கொள்கிறார்.

ஈரானின் பெரும்பாலான ட்ரோன் மற்றும் ஏவுகணை உற்பத்தி வசதிகள் அழிக்கப்பட்டிருந்தாலும், ஈரானியர்கள் இன்னும் தங்களது ஏவுகணைகளில் சுமார் ஐந்தில் ஒரு பகுதியை அணுகும் நிலையில் உள்ளனர் என்று திரு டிரம்ப் என்பிசியிடம் கூறினார்.

“அவர்களிடம் சில ஏவுகணைகள் உள்ளன. சில ட்ரோன்களும் உள்ளன. விகிதாச்சார அடிப்படையில், ஒருவேளை ஈரானின் ஏவுகணைகளில் 21-22 விழுக்காடு இருக்கலாம் என்று நான் கூறுவேன். இது ஏராளமான ஏவுகணைகள்தான், ஆனால் நாம் முதலில் தாக்கியபோது இருந்த அளவுக்கு இது இல்லை,” என்று டிரம்ப், என்பிசி நியூஸின் ‘மீட் தி பிரஸ்’ நிகழ்ச்சியில் கூறியதாக, ஜூன் 5ஆம் தேதியன்று அந்த ஊடகம் வெளியிட்ட சில பகுதிகள் தெரிவிக்கின்றன.