📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News June 05, 2026 02:01 AM

மனைவியின் நடத்தையில் சந்தேகம்... குழந்தைகள் கண் எதிரே எலக்ட்ரீசியன் செய்த பயங்கர சம்பவம்

மனைவியின் நடத்தையில் சந்தேகம்... குழந்தைகள் கண் எதிரே எலக்ட்ரீசியன் செய்த பயங்கர சம்பவம்

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வட்டியூர்காவு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 46), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஹசீனா பீவி (36). இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 மாதமாக திருவனந்தபுரத்தை அடுத்த நாலாஞ்சிராவில் உள்ள வாடகை வீட்டில் இவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

இதற்கிடையே ஹசீனாபீவி நடத்தை மீது சுரேஷ்குமாருக்கு சந்தேகம் இருந்து வந்துள்ளது. இதுபற்றி கேட்டதால் கண வன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபித்துக் கொண்டு வெளியே சென்ற ஹசீனாபீவி கடந்த வாரம் மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். அதன் பிறகும் கணவன், மனைவி இடையே தகராறு வலுத்தது.

இதனை தொடர்ந்து ஹசீனாபீவி மண்ணந்தலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 2 பேரையும் அழைத்து சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். ஏற்கனவே மனைவி மீது கோபத்தில் இருந்த சுரேஷ்குமாருக்கு. இதுமேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று அதிகாலையில் 2 பேருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியது. இதனால் தூக்கத்தில் இருந்த குழந்தைகளும் கண் விழித்தனர்.

அந்த சமயத்தில் திடீரென கத்தியை எடுத்த சுரேஷ்குமார், ஹசீனாபீவியின் கழுத்தை அறுத்து விட்டு அங் கிருந்து தப்பி ஓடினார். இந்த பயங்கர காட்சியை நேரில் பார்த்த குழந்தைகள் கதறி அழுதனர். கணவரின் கொடூர தாக்குதலை சற்றும் எதிர்பார்க்காத ஹசீ னாபீவி, ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தபடி சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை பற்றிய தகவல் அறிந்ததும் மண்ணந்தலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடிய சுரேஷ்குமாரை தேடிவருகின்றனர். குழந்தைகள் கண் எதிரே மனைவியை எலக்ட்ரீசியன் கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.