Immortal Day 6 Box Office
சென்னை: ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடிப்பில் மாரியப்பன் சின்னா இயக்கியிருக்கும் இம்மார்ட்டல் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் ரிலீஸானது. படத்துக்கு ரசிகர்களிடையே சூப்பர் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்நிலையில் அப்படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் ஹீரோவாக தொடர்ந்து நடித்துவருகிறார். இருப்பினும் பெரிய வெற்றி எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே உச்சக்கட்ட நம்பிக்கையோடு இப்போது அவர் மாரியப்பன் சின்னா என்பவரது இயக்கத்தில் இம்மார்ட்டல் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக கோலிவுட்டின் சென்சேஷனலாக மாறியிருக்கும் கயாடு லோஹர் நடித்திருக்கிறார்.
எப்படி இருந்தது படம்?: படத்தின் ட்ரெய்லரில் கயாடுவின் கவர்ச்சியைத்தான் ஹைலைட் செய்திருந்தார்கள். எனவே படம் அந்த டோனில் இருக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு; செம சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் இயக்குநர். வெறும் ரொமான்ஸ் படமாக மட்டும் இல்லாமல் சர்வைவல், த்ரில்லர், ஃபேண்டஸி என கலந்துகட்டி வாம்ப்பயர் ஜானரில் அசத்தியிருக்கிறார். அது ரசிகர்களிடம் பயங்கரமாகவே கனெகட் ஆகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக படத்துக்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கொடுத்தார்கள்.
முதல் படம்: கயாடு லோஹருக்கு இதுதான் முதல் படம். ஆனால் இந்தப் படம் தாமதமாக ரிலீஸானதால் டிராகன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகிவிட்டன. இதில் ஜிவி, கயாடு இடையேயான கெமிஸ்ட்ரி உண்மையில் சூப்பராகவே ஒர்க் அவுட் ஆகியிருந்தது. குறிப்பாக படத்தின் கிராஃபிக்ஸ் பணிகளைத்தான் ரசிகர்கள் தலைமேல் வைத்து கொண்டாடுகிறார்க்ள். பல இடங்களில் இது உண்மையா இல்லை சிஜியா என்று தெரியாத அளவுக்கு வேலை செய்திருந்தார்கள்.
சாமின் இசையும் சூப்பர்: இந்த சிஜி பணிக்காக மொத்தம் இரண்டரை வருடங்கள் படக்குழுவினர் உழைப்பை கொட்டியிருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. மேலும் சாம் சி.எஸ்ஸின் இசையும் ஹாலிவுட் தரத்தில் இருந்தது. ஆகமொத்தம் ஜிவிக்கு இந்தப் படம் சூப்பர் வெற்றியை கொடுத்திருக்கிறது. நேற்றுகூட படக்குழு சார்பில் நன்றில் தெரிவிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது ஜிவிக்கு படத்தின் தயாரிப்பாளர் யமஹா ஆர்.எக்ஸ் 100 பைக்கை பரிசாக வழங்கினார்.
வசூல் நிலவரம்: இப்படி படக்குழுவினருக்கு விமர்சன ரீதியாக பரம திருப்தியை கொடுத்த இம்மார்ட்டல் வசூலிலும் நிம்மதியை கொடுத்திருக்கிறது. முதல் நாள் முதல் காட்சி முடிந்ததிலிருந்தே படம் பற்றி பாசிட்டிவ் பேச்சுக்கள் வந்ததன் காரணமாக கூட்டமும் அதிகரித்தது. எனவே வசூலும் சீரான நிலையிலேயே இருந்தது. படம் ரிலீஸாகி ஆறாவது நாளான நேற்று அப்படம், 49 லட்சத்தை வசூலித்திருக்கிறதாம். இதுவரை மொத்தம் அப்படம் ஆறு கோடியே 31 லட்சத்தை அள்ளியிருப்பதாக Sacnilk இணையதளம் கூறியிருக்கிறது.