📅 Thursday, 10 September 2026 IST | ஆவணி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 10, 2026 07:31 AM

Sardar 2 X Review: சாதிக்குமா சர்தார் 2?.. நம்பிக்கையை மித்ரன் காப்பாற்றினாரா?.. ட்விட்டர் விமர்சனம்!

Sardar 2 X Review: சாதிக்குமா சர்தார் 2?.. நம்பிக்கையை மித்ரன் காப்பாற்றினாரா?.. ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: இரும்புத்திரை, ஹீரோ, சர்தார் படங்களை இயக்கிய பி.எஸ். மித்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது கூட ஹீரோ படத்துக்குப் பிறகு எந்த ஹீரோவும் தனக்கு போன் செய்யவில்லை என்றார். ஆனால், கார்த்தி தான் நம்பிக்கையுடன் சர்தார் பண்ண வந்தார் என்றார்.

தொடர்ந்து சோலோ ஹிட்டுக்காக போராடி வரும் நடிகர் கார்த்தி மீண்டும் மித்ரனை நம்பி சர்தார் 2 படத்தை கையில் எடுத்துள்ளார். உலகமெங்கும் செப்டம்பர் 10ம் தேதியான இன்று சர்தார் 2 திரையரங்குகளில் வெளியாகிறது.

காலை காட்சியை வெளிநாடுகளிலும், பக்கத்து ஊர்களிலும் பார்க்கத் தொடங்கிய ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் சர்தார் 2 படத்துக்கான விமர்சனங்களை பதிவிட தொடங்கி உள்ளனர். கார்த்தியின் சர்தார் 2 சாதித்ததா? அல்லது சோதித்ததா? என்பது தொடர்பாக வெளியாகி உள்ள ட்விட்டர் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

சர்தார் 2 இன்று ரிலீஸ்: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள சர்தார் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வருகிறது. சர்தார் முதல் பாகம் தீபாவளிக்கு வெளியாகி ஒரு சிறப்பான வரவேற்பை கார்த்திக்கு கொடுத்த நிலையில், முதல் பாகத்தை விட பெரிய பொருட்செலவில் ஒரு ஸ்பை த்ரில்லர் ஆக்‌ஷன் படத்தை பி.எஸ். மித்ரன் கொடுத்துள்ளார்.

பவர்ஹவுஸ் பர்ஃபார்மன்ஸ்: சர்தார் 2 படம் சர்வதேச தரத்தில் உள்ளது. நடிகர் கார்த்தி ஆக்‌ஷன் காட்சிகளில் பவர்ஹவுஸ் பர்ஃபார்மன்ஸை வெளிப்படுத்தியுள்ளார். இதுவரை இல்லாத அளவுக்கு நடிகை மாளவிகா மோகனன் ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்துள்ளார். டீட்டெயிலிங் செய்வதில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் அடுத்த கட்டத்துக்கு சென்றுள்ளார். 2ம் பாதியும் இதே போல இருந்தால் படம் பட்டாசு தான் என இந்த நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.

பேங்கர் இன்டர்வெல்: சர்தார் 2 படத்தின் இடைவேளை காட்சி செம பேங்கராக உள்ளது. கார்த்தி கண்டிப்பாக இந்த படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கப் போவது உறுதி என இந்த நெட்டிசன் சர்தார் 2 படத்துக்கு ஃபயர் விட்டுள்ளார்.

பெரிய செகண்ட் ஹாஃப் வேண்டும்: டாக்ஸிக் படத்துக்கு டார்ச்சர் என போட்டு நோட்டீஸ் வாங்கிய அமெரிக்க வாழ் ஆன்லைன் விமர்சகர் கிறிஸ்டோபர் கனகராஜ் சர்தார் 2 முதல் பாதியை பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல், இரண்டாவது பாதி இன்னமும் பெரிதாக இருக்க வேண்டும் என கமெண்ட் போட்டுள்ளார்.

கிரிஞ்சா இருக்கு: சர்தார் 2 படத்தின் முக்கிய மிஷனே மொக்கையாகவும் க்ரிஞ்ச் வொர்த்தியாகவும் உள்ளது. பெரிதாக பாடல்கள், தேவையற்ற டீவியேஷன் எல்லாம் இல்லாமல் இருக்கிறது. சீனியர் சர்தார் ரோலில் கார்த்தி மாஸ் காட்டுகிறார். ஆனால், மத்தபடி படம் எடுபடவில்லை என சர்தார் 2வுக்கு நெகட்டிவ் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.