Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax Changes: ஏப்ரல் 1ம் தேதி முதல் சம்பள உயர்வு! யாருக்கெல்லாம் தெரியுமா?
Income Tax New Rules 2026: ஏப்ரல் 1ம் தேதி முதல் ரூபாய் 12 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஊதியமாக பெறுபவர்களுக்கு வருமான வரி உச்சவரம்பு அமலுக்கு வருவதால் அவர்களது மாத வருமானம் அதிகரிக்க உள்ளது.
Income Tax New Rules: மத்திய அரசு கொண்டு வந்த புதிய அறிவிப்பின் ஏப்ரல் 1ம் தேதி முதல் மாத ஊதியம் பெறுவோர்களின் வருமானம் அதிகரிக்க உள்ளது.
வருமான வரி உச்சவரம்பு:
அதாவது, புதிய வருமான வரிச்சட்டத்தின் கீழ் முன்பு 7 லட்சம் வரை மட்டுமே ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்த வருமான வரி உச்சவரம்பை ரூபாய் 12 லட்சமாக உயர்த்தப்பட்டு கடந்தாண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால், இனிமேல் ஆண்டு வருமானம் ரூபாய் 7 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சம் வரை பெறுபவர்களுக்கு இனி வருமான வரி உச்சவரம்பு பெறுவார்கள். இதனால், இனிமேல் ஆண்டு வருமானம் ரூபாய் 7 லட்சம் முதல் ரூபாய் 12 லட்சம் வரை பெறுபவர்களுக்கு மாத வருமானம் அதிகரிக்க உள்ளது.
சம்பளம் உயர்வு:
மாத சம்பளத்துடன் சேர்ந்து இனிமேல் ரூபாய் 6 ஆயிரத்து 600 வரை அதிகரிக்க உள்ளது. விலைவாசி அதிகரித்து வரும் சூழலில் இந்த சம்பள உயர்வு மக்கள் மத்தியில் நிம்மதியை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பள உயர்வு தனியார் மற்றும் அரசு என அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.
அதேசமயம் ரூபாய் 7 லட்சத்திற்கும் குறைவாக ஊதியம் பெறுபவர்களுக்கு ஊதியத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று கருதப்படுகிறது.
எவ்வளவு லாபம்?
அதற்கு மேல் சம்பளம் பெறுபவர்களுக்கு எவ்வளவு வரி லாபம்? என்பதை கீழே காணலாம்.
ரூபாய் 16 லட்சம் - ரூபாய் 50 ஆயிரம் வரை லாபம் ( 7.5 சதவீதம்)
ரூபாய் 18 லட்சம் - ரூபாய் 70 ஆயிரம் வரை லாபம் ( 8.8 சதவீதம்)
ரூபாய் 20 லட்சம் - ரூபாய் 90 ஆயிரம் வரை லாபம் ( 10 சதவீதம்)
ரூபாய் 25 லட்சம் - ரூ.1.10 லட்சம் வரை லாபம் ( 13.2 சதவீதம்)
ரூபாய் 50 லட்சம் - ரூபாய் 1.10 லட்சம் வரை லாபம்( 21.6 சதவீதம்)
புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழ் என்ன வரிவிகிதம் என்பதை கீழே காணலாம்.
ரூபாய் 4 லட்சம் வரை - இல்லை
ரூபாய் 4 லட்சம் முதல் ரூபாய் 8 லட்சம் வரை - 10 சதவீதம்
ரூபாய் 12 லட்சம் முதல் ரூபாய் 16 லட்சம் வரை - 15 சதவீதம்
ரூபாய் 16 லட்சம் முதல் ரூபாய் 20 லட்சம் வரை - 20 சதவீதம்
ரூபாய் 20 லட்சம் முதல் ரூபாய் 24 லட்சம் வரை - 25 சதவீதம்
ரூபாய் 24 லட்சத்திற்கும் மேல் - 30 சதவீதம்
இந்த பலன்கள் அனைத்தும் புதிய வருமான வரி விகிதத்தின் கீழ் வரி செலுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி