📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 17, 2026 04:33 PM

IND vs ENG: இந்த 3 வீரர்களை உடனடியாக ஒருநாள் அணியில் தேர்வு செய்யுங்க.. அப்புறம் நடக்கறதே வேற

IND vs ENG: இந்த 3 வீரர்களை உடனடியாக ஒருநாள் அணியில் தேர்வு செய்யுங்க.. அப்புறம் நடக்கறதே வேற

IND vs ENG: இந்த 3 வீரர்களை உடனடியாக ஒருநாள் அணியில் தேர்வு செய்யுங்க.. அப்புறம் நடக்கறதே வேற

மும்பை: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டியில் 0-4 என்ற கணக்கில் படுதோல்வியை தழுவிய நிலையில் தற்போது ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் கூட இந்திய அணியின் நடுவரிசை வீரர்களான ஆல்ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்த சூழ்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

இதில் இந்திய அணி 233 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா 26 ரன்கள், கில் 31 ரன்கள் விராட் கோலி 65 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 66 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்த சூழலில் தான் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வு மிகவும் மோசமாக இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணியில் வெறும் நான்கு ஸ்பெசலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் மட்டுமே இருந்ததாகவும், இஷான் கிஷன் விக்கெட் கீப்பர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற முறையில் மொத்தம் ஐந்து பேர் தான் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். இதில் இரண்டு வீரர்கள் மட்டும் அரை சதமும் மற்ற இரண்டு வீரர்கள் நல்ல தொடக்கத்தை பெற்று அதனை பெரிய ஸ்கோராக மாற்ற தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இந்திய அணியின் நடுவரிசையில் உள்ள பார்ட் டைம் பேட்டர்கள் மீது அழுத்தம் ஏற்பட்டதாகவும், இந்த அழுத்தத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இந்த இடத்தில் திலக் வர்மா மற்றும் ரிஷப் பந்த் போன்ற திறமை வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இடம்பெற வேண்டும் என்றும் ஆல்ரவுண்டர்களை நம்பினால் இப்படித்தான் போட்டி முடிவுகள் அமையும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் ஏதேனும் ஒரு போட்டியில் விளையாடி அணியை காப்பாற்றுவார்கள் என்றும் ஒவ்வொரு போட்டியிலும் அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நினைப்பது முட்டாள்தனம் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நடுவரிசையை வைத்து உலக கோப்பைக்கு தயாராவது தவறு என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். ஆல் ரவுண்டர்கள் மீது தீராத காதல் இருப்பது இதுக்கு பிரச்சனை என்றும் கூடுதலாக ஒரு ஆல் ரவுண்டர் இருந்தாலே போதும் என்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.