📅 Sunday, 07 June 2026 IST | வைகாசி 24, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 07, 2026 05:00 PM

இனி இணைய வழியில் ஆவண பதிவு..!- புதிய நடைமுறை அறிமுகம்

இனி இணைய வழியில் ஆவண பதிவு..!- புதிய நடைமுறை அறிமுகம்

பத்திர பதிவு துறை தலைவர் அருண்சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்த பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணைய வழியே ஆவணப்பதிவு முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம் பொது மக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் (24X7X365) இணையதளத்தின் மூலம் இணையவழி தங்களது ஆவணங்களை பதிவு செய்து கொள்ள முடியும்.

ஆவணப் பதிவிற்கு சார்பதிவாளர் ஒப்புதல் அளித்ததும், சார்பதிவாளரின் மின்னணு கையொப்பத்துடன் ஆவணமானது சம்பந்தப்பட்ட நபரின் உள்நுழைவிற்கும் அலைபேசிக்கு புலனம் மூலமும் அனுப்பி வைக்கப்படும். அந்த ஆவணத்தை ஆவணதாரர்கள் தங்கள் உள்நுழைவு வழியே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

"வருகை இல்லா ஆவணப்பதிவு நடைமுறை விரைவில் கட்டாயமாக்கப்பட உத்தேசிக்கப்பட்டு உள்ளதைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட நெறி முறைகள் வழங்கப்படுகிறது.

1.சார்பதிவாளர் அலுவலகம் வராமலேயே பதிவு செய்யக்கூடிய ஆவணங்கள்:

2.முதல் விற்பனை மனை.

3. முதல் விற்பனை அடுக்குமாடி குடியிருப்பு.

4. தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய விற்பனை ஆவணங்கள்.

5. வங்கிகளில் பெறும் கடனுக்கான அடமானம் மற்றும் ரசீது ஆவணங்கள், பொதுமக்கள், கட்டுமான நிறுவனங்கள், ஆவண எழுத்தர்கள் மற்றும் வங்கிகள், வழக்கறிஞர்கள்.

பதிவுத்துறை இணைய தளத்தில் தங்களது உள்நுழைவினை தாங்களே உருவாக்கி மேற்படி ஆவணங்களை (ரசீது) இணையவழியில் சமர்ப்பிக்கலாம்.

ஆவணத்தை எழுதிக் கொடுப்பவர்கள், எழுதிப் பெறுபவர்கள் மற்றும் சாட்சிகள் ஆகிய அனைவருக்கும் ஆதார் அட்டை மேலேற்றம் செய்யவேண்டும்.

ஆதார் ஆணை யத்தின் மூலம் கைரேகை அல்லது கருவிழி படலம் வழி ஆதார் சரிபார்க்கப்பட வேண்டும்.

தொழில்நுட்ப தேவைகள்

1. இணைய இணைப்பு

2. UIDAI அங்கீகரிக் கப்பட்ட எல்1 விரல் ரேகை எந்திரம் மற்றும் கருவிழிப்ப டலம் கவரும் கருவி

3. புகைப்படக் கருவி

சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள், விபரம் தொடர்பு அலுவலர் பெயர் (டி.சி.எஸ். நிறுவனம்) எண்கள் வருமாறு:-

வன்பொருள்- முகமது யூனுஸ்-7397574067, அருண்குமார்- 9940446694

மென்பொருள் -சீனிவாஸ் கணேஸ்-6369798973, டில்லி பாபு -8525805957.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.