மல்லிகைப் பூ.. கேரள புடவை.. ஓணம் பண்டிகையில் ஜொலிக்கும் நடிகைகளின் போட்டோஷூட்!
சென்னை: கேரள மாநிலத்தின் மிக முக்கியமான மற்றும் வண்ணமயமான அறுவடைத் திருநாள் ஓணம் பண்டிகையாகும். இத்திருவிழா, இனம், மதம் கடந்து அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கிறது. இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் முதன்மை நாளான திருவோணம் இன்று ஆகஸ்ட் 26 கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை நடிகைகள் பாரம்பரிய உடை அணிந்து அசத்தலாக கொண்டாடி உள்ளனர்.
ரஜிஷா விஜயன் : கர்ணன், ஜெய் பீம், சர்தார்,பைசன் காளமாடன் திரைப்படங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரஜிஷா விஜயன். கேரள பாரம்பரியத்தின் அடையாளமான வெள்ளையும் தங்க நிற ஜரிகையும் கலந்த புடவையில் அடர்ந்த பச்சைப் மரங்கள் காடுகளும் நிறைந்த இயற்கை சூழலில் அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார்.
விஜயலட்சுமி: சென்னை 28 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை விஜயலட்சுமி, ஒணம் பண்டிகைக்காக ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தி உள்ளார். அதில், பாரம்பரிய உடை, நகைகள் மற்றும் தலை நிறைய மல்லிகைப் பூவுடன் அவர் கொடுக்கும் போஸ்கள் ரசிகர்களைத் சுண்டி இழுத்து வைத்துள்ளது.
பாவனா: தமிழ், மலையாளம் மற்றும் கன்னடத் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் பல கோடி ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை பாவனா.ஓணம் கொண்டாட்டத்திற்காகத் தங்க நிறம் மற்றும் சிவப்பு-பச்சை பார்டர் அமைந்த பாரம்பரிய கேரளா உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
யாஷிகா ஆனந்த்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடிகை யாஷிகா ஆனந்த் ரசிகர்களுக்குத் தனது ஸ்டைலில் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் சிறப்புப் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். நீண்ட ஜடை போட்டு, அதில் தலைமுடி நீளத்திற்கு அடர்த்தியாக மல்லிகைப் பூவைச் சூடி, தலையில் கைகளை வைத்து அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஈர்க்கிறது.
ஒணம் வாழ்த்து: நடிகை அனிகா சுரேந்தர் ஓணம் பண்டிகைக்கு கையில் மல்லிகைப் பூவுடன் சிம்பிள் அழகுடன் தனது ரசிகர்களுக்கு ஓணம் வாழ்த்து கூறியுள்ளார். வெள்ளை நிறச் சேலையில் நாற்காலியில் அமர்ந்தபடி கைகளில் மல்லிகைப் பூச்சரத்தை வைத்துக்கொண்டு அவர் கொடுத்திருக்கும் அழகான போஸ் பார்ப்பவர்களைச் சொக்கும் வகையில் உள்ளது.
மஹிமா நம்பியார்: சாட்டை, குற்றம் 23, இராவண கோட்டம், சந்திரமுகி 2 போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் நடிகை மஹிமா நம்பியார். இவர் கேரளாவின் அறுவடைத் திருநாளான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ரசிகர்கள் அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.