📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 24, 2026 11:34 AM

 இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு

 இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: 'மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில், இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில், நேற்று மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவியது.

மதுரையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேல், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவாகிறது. தமிழக கடலோரப் பகுதிகளில், கீழ்மட்ட வளிமண்டலத்தில், ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

அதனால், இன்றும், நாளையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கடலுார், விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரியிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன், மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை நீடிக்கலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை, இரவு நேரங்களில், நகரின் சில பகுதிகளில், இடி, மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.