📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 30, 2026 07:31 AM

இன்று மறைந்த நடிகர் ஜெயமணி யார் தெரியுமா? 40 சீரியல்களை இயக்கிய கலைஞர்.. பலருக்கும் தெரியாத கதை!

இன்று மறைந்த நடிகர் ஜெயமணி யார் தெரியுமா? 40 சீரியல்களை இயக்கிய கலைஞர்.. பலருக்கும் தெரியாத கதை!

இன்று மறைந்த நடிகர் ஜெயமணி யார் தெரியுமா? 40 சீரியல்களை இயக்கிய கலைஞர்.. பலருக்கும் தெரியாத கதை!

சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் சீரியல் மூலம் பூங்காவனமாக ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த நடிகர் ஜெயமணி பல வருடங்களுக்கு பிறகு சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்தார். ஆனால் திடீரென இன்று (ஜூலை 29) தன்னுடைய 79வது வயதில் மாரடைப்பால் காலமாகி இருக்கிறார். இந்த செய்தி சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

சில வருடங்களாக எந்த சீரியல்களிலும் நடிக்காமல் இருந்த ஜெயமணி திடீரென சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வந்தபோது அவரை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இனி இந்த சீரியலில் கதை வேகம் எடுக்கப் போகிறது என்று பலரும் சொல்லி வந்தனர். ரோகிணியின் மலேசியா மாமாவாக அவர் வந்த சில காட்சிகளே ரசிகர்களுக்கு பிடித்து போய்விட்டது. அதிலும் அவர் செய்த ரகளை எல்லாம் அந்த கேரக்டரோடு அப்படியே செட்ஆகி விட்டது.

ஆனால் அவருடைய கேரக்டருக்கு பின்னால் இருந்த கலைஞரின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது என்று பலருக்கும் தெரியாது. இன்று ரசிகர்களுக்கு அவரை மலேசியா மாமாவாக தெரியும். ஆனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு அவர் திருமதி செல்வம் சீரியல் பூங்காவனம். இந்த நிலையில் தான் அவர் சமீபத்தில் பேசிய பேட்டி ஒன்றுகூட இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஜெயமணியின் கடைசி பேட்டி

அதில் அவர் பேசும்போது, சிறகடிக்க ஆசை சீரியலில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த சீரியலில் என்னை பார்த்ததும் ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. திருமதி செல்வம் சீரியலுக்குப் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தேன். ஆனால் அதற்கு பிறகு நான் எனக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை அதனால் நானும் அப்படியே இருந்து விட்டேன்.

அதற்குப் பிறகு குமரன் சார் இயக்கத்தில் மீண்டும் நடிக்க போறேன் என்றதும் ரொம்ப சந்தோஷமாக வந்தேன். இயக்குனர் என்ன சொல்லுறாரோ அதை ஒரே டேக்கில் நடித்து முடித்து விடுவேன். அதனால்தான் என்னை எல்லோரும் பாராட்டுறாங்க. மலேசியா மாமா கேரக்டரை ரசிகர்கள் இவ்வளவு விரும்புவாங்கன்னு நான் கூட எதிர்பார்க்கவே இல்லை என்று சிரித்தபடியே கூறியிருந்தார்.

நடிகர் ஜெயமணி இயக்கிய சீரியல்கள்

அதுபோல ஜெயம் மணியை பலருக்கும் நடிகராக தெரிந்து இருக்கலாம். ஆனால் அவர் ஒரு சிறந்த இயக்குனரும் கூட .நான் சுமார் 40 சீரியல்களை இயக்கியிருக்கிறேன் என்று அந்த பேட்டியில் பெருமையாக கூறியிருந்தார். சின்னத்திரையில் மட்டுமல்ல சில திரைப்படங்களிலும் நடித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் பேசும்போது ஆர் ஜே பாலாஜி நடித்த சொர்க்கவாசல் படத்தில் நல்ல கேரக்டரில் நடித்திருக்கிறேன், அந்த படம் வெளியான பிறகு இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும் என்று நம்புகிறேன் என்று சொல்லி இருந்தார்.

ஜெயமணி சின்ன வயதிலிருந்து மேடை நாடகங்களில் நடித்தவர். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் ஆகியோரின் மனதில் வைத்துக்கொண்டு அவர்களைப் போல நடித்துக் காட்டுவேன் என்றும் அந்த ஆசையால் தான் நடிப்புக்கு வந்தேன் என்றும் அவர் கூறி இருந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக சில வருஷம் நடிப்பை விட்டு விலக வேண்டி இருந்தாலும் நாடக மேடையை மட்டும் அவர் ஒருபோதும் விட்டு விலகவில்லையாம்.

நடிகர் ஜெயமணி குடும்பம்

அது போல அவருடைய மனைவி மாலதி டப்பிங் கலைஞராக பணியாற்றி வந்திருக்கிறார். மகள் ஆசிரியராக வேலை பார்த்து வருவதாகவும் மகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் அந்த பேட்டியில் அவர் பேசியிருந்தார். சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பற்றிய உண்மைகளை மொத்த குடும்பத்திற்கும் சொன்னது இவர்தான்.

ரசிகர்கள் வேண்டுகோள்