📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 05, 2026 10:30 PM

இண்டியா கூட்டணியில் விரிசல்; கூட்டத்தைப் புறக்​கணிக்கும் திமுக, இந்தியா செய்திகள்

இண்டியா கூட்டணியில் விரிசல்; கூட்டத்தைப் புறக்​கணிக்கும் திமுக, இந்தியா செய்திகள்

புதுடெல்லி: ஜூன் 8ஆம் தேதி டெல்​லி​யில் கூடும் ‘இண்டியா கூட்​டணி’யின் கூட்டத்தைப் புறக்​கணிப்​ப​தாக அதிரடி​யாக அறி​வித்​திருக்​கிறது திமுக.

காங்கிரசின் துரோகத்​தால் மனவேதனை அடைந்த தொண்டர்களின் உணர்​வுக்கு மதிப்​பளிக்​கும் வித​மாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அறி​வித்​திருக்​கும் திமுக, காங்​கிரஸ் பங்​கேற்​கும் எந்​தக் கூட்டத்​தி​லும் இனி பங்​கேற்​க​மாட்​டோம் என்றும் அறி​வித்​திருக்​கிறது.

“நாட்டு நலன் கருதி இண்​டியா கூட்​ட​ணி​யில் இருக்​கும் மற்ற கட்​சிகள் முன்​வைக்​கும் பிரச்​சினை​களுக்கு ஆதர​வாகக் குரல்​கொடுப்​போம்,” என்று திமுக சொல்லி இருக்​கிறது.

இண்​டியா கூட்​ட​ணி​யில் ஆகப்​பெரும் கட்​சி​யாக காங்​கிரஸ் இருந்​தா​லும் கூட்​ட​ணி​யில் இருக்​கும் மற்ற கட்​சிகளுக்கு காங்​கிரஸ் மீது ஏதோ ஒரு மன வருத்​தம் இருக்​கவே செய்​கிறது.

அத்​தகைய வருத்​தம் ஏதும் இல்​லாமல் இருந்த ஒரே கட்சி திமுக மட்​டும் தான். இப்​போது அதை​யும் பகைத்​துக் கொண்​டு விட்​டது காங்​கிரஸ்.

திமுகவுக்​குப் பதிலாக தவெக இண்​டியா கூட்​ட​ணி​யில் சேரலாம் எனச் செய்​தி​கள் வரு​கின்​றன.

இண்​டியா கூட்​டணி கூட்​டத்தைப் புறக்​கணிப்​ப​தாக திமுக மட்​டும் வெளிப்​படை​யாக அறி​வித்​திருக்​கிறது.

காங்​கிரஸ் மீதிருக்​கும் வருத்​தங்​களால் இன்​னும் சில கட்​சிகளும் கூட்​டத்​தைப் புறக்​கணித்​தால் இண்​டியா கூட்​ட​ணிக்கு மாற்​றாக இன்​னொரு கூட்​டணி பிறக்​கலாம் என்று கூறப்படுகிறது.

திமுகவின் இந்த முடிவு ஏற்​கெனவே எதிர்​பார்த்த ஒன்​று​தான் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அதேசம​யம், இந்த விஷ​யத்​தில் பாஜக மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இண்​டியா கூட்டணி​யின் பிர​தான அங்​க​மாக இருந்​தது திமுக. திரு ஸ்டா​லின் ‘ராகுல்தான் பிரதமர்’ என்ற முழக்கத்தை முதலில் முன்னெடுத்தவர்.

அதே​போல், காங்​கிரசைவிட பிரதமர் நரேந்திர மோடியை​யும் பாஜகவை​யும் எதிர்த்​தவரும் ஸ்டாலின்தான்.

திமுகவைப் பொறுத்​தவரை, மத்​தி​யில் பாஜகவை எதிர்​கொள்​ளும் தேசியச் சக்தி என்ற முறை​யில் காங்​கிரசைப் பெரிதும் நம்​பியது.

ஆனால், இந்​தத் தேர்​தல் அந்த நம்​பிக்​கையை எல்​லாம் தூள் தூளாக்​கி​விட்​டது.

ஆரம்​பத்​திலிருந்தே தவெகவைக் காட்டி திமுகவை நெருக்​கிய காங்​கிரஸ், தேர்தல் முடிவுக்குப் பிறகு தவெகவுக்கு ஆதர​வளித்து அமைச்​சர​வை​யிலும் இடம்பெற்றது.

அத்​துடன், இனி வரும் தேர்​தல்​களி​லும் தவெகவுடன்தான் கூட்​ட​ணி என்​றும் தாமாக முன்​வந்து அறி​வித்​தது. இது திமுகவுக்குக் கடும் மன உளைச்​சலை ஏற்படுத்தியுள்ளது.