📅 Sunday, 04 October 2026 IST | புரட்டாசி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu July 16, 2026 05:30 PM

இராஜிக்கண்ணு நூல்கள் வெளியீடு

இராஜிக்கண்ணு நூல்கள் வெளியீடு

ஓய்வுபெற்ற தமிழாசிரியரும் விரிவுரையாளருமான முனைவர் மா. இராஜிக்கண்ணு எழுதி வெளியிட்ட நூல்கள் வரிசையில் மேலும் இரண்டு நூல்கள் சேருகின்றன.

‘முக்கனிகள்’, ‘ஆய்வுக்கோவை’ என்ற தலைப்புகளில் இரண்டு நூல்கள் வெளியிடப்படுகின்றன. நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (ஜூலை 18) மாலை 5.30 மணிமுதல் இரவு 7.30 மணிவரை 100 விக்டோரியா ஸ்திரீட்டில் அமைந்துள்ள தேசிய நூலகத்தின் ஐந்தாவது மாடியில் இருக்கும் ‘இமாஜினேஷன்’ அறையில் நடைபெறுகிறது.

திரு இரா அருண்மொழி வரவேற்புரை ஆற்றுகிறார்.

முதல் நூலினைக் கவிஞர் க.து.மு இக்பாலும் திரு நா. ஆண்டியப்பனும் பெறுகின்றனர்.

‘முக்கனிகள்’ எனும் தலைப்பு கொண்ட நூலில் பெயருக்கு ஏற்றாற்போல் தமிழ் இலக்கியத்தை அலங்கரிக்கும் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகிய மூன்று பிரிவுகள் இடம்பெறுகின்றன.

ஆய்வுக்கோவை எனும் நூலில் தமிழ் இலக்கியம் சார்ந்த பத்து ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

வருகையை உறுதிசெய்ய 98007979 எனும் கைப்பேசி எண்ணை அழைக்கவும்.