📅 Friday, 05 June 2026 IST | வைகாசி 22, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business May 29, 2026 11:30 AM

ஜிஎம் கிள்ளான் வணிகச் சூழலுக்குத் துணை வருமானப் போக்கு உந்துசக்தி

Business

ஜிஎம் கிள்ளான் வணிகச் சூழலுக்குத் துணை வருமானப் போக்கு உந்துசக்தி

Google News Tamil Business

கோலாலம்பூர், 29 மே - தற்போதைய துணை வருமானப் போக்கு மற்றும் மின்னிலக்க வணிகம், ஜிஎம் கிள்ளானை ஒரு மொத்த கொள்முதல் மையமாக மட்டும் அல்லாமல், தொழில் முனைவோர் சமூகத்தை ஒரு ஆற்றல்மிக்க சூழல் அமைப்பில் ஒன்றிணைக்கும் ஒரு நவீன வணிக மையமாக மாற்றி வருகிறது.மொத்த விற்பனை, சில்லறை விற்பனை மற்றும் வாழ்க்கை முறை அம்சங்களின் கலவையுடன், நாட்டின் இந்த மாபெரும் மொத்த விற்பனை மையம், தொழில் முனைவோர் தங்களின் பொருட்களைப் பெறவும், வணிக வலையமைப்பை உருவாக்கவும், வர்த்தகப் பெயரை விரிவுபடுத்தவும் முக்கிய தேர்வாகத் தொடர்கிறது என்று ஜிஎம் கிள்ளான் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.அந்த அறிக்கையின்படி, தற்போதைய வணிகப் போக்கின் வளர்ச்சிக்கு ஏற்ப, நேரடி வணிகத்துடன், இ-வர்த்தக தளங்கள் மூலமாகவும் பல தனிநபர்கள் சிறிய அளவிலான வணிக வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர்."ஒரு துணை வருமான ஆதாரமாகத் தொடங்கி, இன்று பல தொழில்முனைவோர் மாறிவரும் வணிகப் போக்குகள் மற்றும் தற்போதைய நுகர்வோர் வாங்கும் முறைக்கு ஏற்ப, தங்கள் வணிகத்தை மிகவும் தீவிரமாக விரிவுபடுத்துவதில் வெற்றி கண்டுள்ளனர்" என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.இதனிடையே, எச்.எஸ்.கியூ டிரேடிங் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் இயக்குனர் வின்சென்ட் லியூ, 'Dr. Flask' என்ற தனது சொந்த வர்த்தகப் பெயரை உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்கு முன், விற்பனைப் பிரதிநிதி அல்லது 'டிராப்ஷிப்' மற்றும் இணையவழி விற்பனை உள்ளிட்ட பல்வேறு வகையான வணிகங்களில் ஈடுபட்டதாகக் கூறினார்.பெயர் மற்றும் சின்னங்களை அச்சிட்டுத் தனிப்பயனாக்கக் கூடிய பானப் புட்டிகள் அல்லது 'டம்ளர்' வணிகத்தை நடத்தி வரும் லியூ, தற்போதைய மின்னிலக்கத் தளங்களும் சமூக ஊடகங்களும் தொழில்முனைவோர் விரைவாகவும் நெகிழ்வாகவும் வளரப் பெரிதும் உதவுவதாகக் குறிப்பிட்டார்."வணிக உலகில் ஈடுபட்டிருந்த காலத்தில், Dr. Flask-ஐ உருவாக்குவதில் கவனம் செலுத்துவதற்கு முன் பல்வேறு வணிக மாதிரிகளை நான் முயற்சித்தேன். ஜிஎம் கிள்ளானில் உள்ள வணிக சமூகத்தின் ஆதரவுடன், எங்கள் வணிகம் மேலும் வளர்ச்சியடைந்து, தற்போது இங்கு எங்களுக்குப் பல கடைகள் உள்ளன," என்று அவர் கூறினார்."என்னைப் பொறுத்தவரை, மின்னிலக்கத் தளங்களும் நேரடிக் கடைகளும் ஒன்றுக்கொன்று துணைபுரிகின்றன. மின்னிலக்கத் தளங்கள் சந்தைப்படுத்தலுக்கும் தற்போதைய போக்குகளைப் பின்பற்றுவதற்கும் உதவுகின்றன. அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் மத்தியில் வர்த்தகப் பெயர் மற்றும் பொருட்கள் மீது நம்பிக்கையை வளர்க்க நேரடிக் கடைகள் அவசியமாகின்றன," என்று அவர் மேலும் தெரிவித்தார்.ஜிஎம் கிள்ளானின் வணிகச் சூழல் அமைப்புடன் இணைந்து வளர்ந்த உள்ளூர் தொழில்முனைவோரில் லியூவும் ஒருவர்.இதனிடையே, வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், இன்றைய தொழில்முனைவோர் மற்றும் புதிய தலைமுறை வணிகர்களுக்கு அதிக வாய்ப்புகளையும் தொடர்புகளையும் உருவாக்கும் ஒரு தளமாக, நவீன வணிக மையம் என்ற தனது பங்கைத் தொடர்ந்து வலுப்படுத்தப் போவதாக ஜிஎம் கிள்ளான் நம்பிக்கை தெரிவித்துள்ளது.-- பெர்னாமா