📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema July 21, 2026 10:34 PM

'ஜனநாயகன்' தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்டதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது

'ஜனநாயகன்' தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்டதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது

'ஜனநாயகன்' தணிக்கை சான்றிதழ் அளிக்கப்பட்டதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது - இயக்குநர் எச்.வினோத் ஆவேசம்

‎விஜய் சார், சட்டமன்றத்திற்குள் வருவதிற்கு முன்தாகவே அந்த சைகை செய்து உள்ளார்.‎படத்தில் செய்ததைதான் சட்டமன்றத்தில் செய்து காண்பித்துள்ளா் என்று இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.

Published : July 21, 2026 at 8:56 PM IST

சென்னை: 'ஜனநாயகன்' படத்திற்கு சென்சார் வழங்கியதில் எங்களுக்கு அநீதி நடந்துள்ளது; ஆனால் அதற்கு ஆதாரமில்லை என்று திரைப்படத்தின் இயக்குநர் எச்.வினோத் வேதனை தெரிவித்துள்ளார்.

தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம், பல தடைகளைத் தாண்டி நாளை மறுநாள் (ஜூலை 23) வெளியாக உள்ளது. இந்நிலையில், திரைப்படத்தின் இயக்குநர் எச்.வினோத், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள கே.வி.என். தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "‎‎ஜனநாயகன் படம் நிறைய தடைகள், பிரச்சனைகளுக்குப் பிறகு வெளியாக உள்ளது. அதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும்.

இந்த படத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, நீதி பெற்றுத் தரும் வகையில் மக்கள் திரையரங்கம் சென்று படத்தை பார்த்து எங்களுக்கு ஆதரவு தர வேண்டும்.

இந்த படத்திற்கு 'ஏ' சான்று கொடுத்துள்ளார்கள். இதில், தயாரிப்பாளருக்கும் எனக்கும் வருத்தம்தான். அதை எதிர்த்து சண்டையிட நேரமில்லை. இப்போது படம் வெளியானால்போதும் என்றுள்ளது. படம் இணையத்தில் கசிந்தாலும் படத்தின் முன்பதிவு நன்றாக இருக்கிறது. ஆனாலும் எங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதை விளக்க நேரமில்லை மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள். படம் வெளியாகாத நேரத்தில், விஜய் சாரும் தயாரிப்பாளரும் எனக்கு உறுதுணையாக இருந்தனர்.

ரீமேக் படம் ஏன்?

‎விஜய் சாரின் கடைசி படத்தை ஏன் ரீமேக் படமாக இயக்க வேண்டும் என்று பலர் கேள்வி எழுப்பினர். கதாநாயகன் விஜய் பல கதைகளை கேட்டிருந்தபோதிலும் இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. பெண்கள் மீதான மரியாதையை மேலும் அதிகரிக்க கூடிய வகையில் இத்திரைப்படம் அமைக்கப்பட்டிருக்கிறது. பல இயக்குநர்கள் இருந்தபோதிலும் இந்த திரைப்படத்தை நான் இயக்க வேண்டும் என என்னிடம் கேட்டுக் கொண்டார்.

‎சென்சார் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. ‎சென்சார் பற்றி பேச நிறைய உள்ளன. ஆனால் ஆதாரம் இல்லாமல் பேச முடியாது. ‎எங்களுக்கு ஒரு அநீதி நடந்துள்ளது. ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை. ‎விஜய் சார், சட்டமன்றத்திற்குள் வருவதிற்கு முன்தாகவே குறிப்பிட்ட அந்த சைகையை செய்துள்ளார். ‎படத்தில் செய்ததைதான் சட்டமன்றத்தில் அலர் செய்து காண்பித்துள்ளார்.

கரூர் சம்பவம்

கரூர் துயர சம்பவம் நடக்கும்போது, முதலமைச்சருடன் நான் இருந்ததாக ஊடகங்களில் பார்த்தபோது எனக்கு வருத்தமாக இருந்தது. உண்மையை அறிய வேண்டுமெனில் என் தொலைபேசியை ஆராயலாம். எங்கள் வீட்டின் சிசிடிவி காட்சிகளை பார்க்கலாம். அந்த தேதியில் நான் எங்கிருந்தேன் என்று அனைவருக்கும் தெரியும். இந்த செய்தியை பரப்பியது அறமாற்ற செயலாகும். அந்த விஷயத்தில் ஊடகங்கள் மீதும் எனக்கு வருத்தம் உள்ளது.

படத்தை நாங்களே லீக் செய்தோமா?

படத்தை நாங்களே லீக் செய்தோம் என கூறியபோது மிகுந்த வேதனையாக இருந்தது. நாங்கள் அப்படி செய்திருந்தால் அதை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். ‎அரசியல் லாபத்திற்காகத்தான் அப்படி எங்கள் மீது பழி போட்டார்கள்.

கரூர் சம்பவத்தை திசை திருப்ப "ஜனநாயகன்: படத்தை விஜய் இணையத்தில் கசியவிட்டார் என்று வதந்திகள் பரவின. அதைக் கேட்டு எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள திரைப்படத்தை அவரே இணையத்தில் கசியவிடுவாரா? அப்படி அவர் கசியவிட்டிருந்தால் அதை எளிதாக கண்டுபிடித்திருக்கலாமே?

படத்தின் டிரைலர் காட்சியில் தவறு செய்யக்கூடிய அரசியல்வாதிகளை சாட்டையால் அடிப்பது போன்ற காட்சிகள் இருக்கும். கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி காட்சி அமைக்கப்பட்டது. எந்தவிதமான தனிமனித தாக்குதலும் கிடையாது.

பொய்களை உருவாக்குவதில்தான் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சமூக வலைத்தளத்தில் சாதி, மதம் குறித்து அதிக பொய்கள் பரப்பபட்டு வருகின்றன. அவற்றை தடுக்க தனிச்சட்டங்களை உருவாக்க வேண்டும்.

ஜனநாயகன் படத்தை ‎மக்கள் பார்க்கும்போது என்ன புரிந்து கொண்டார்கள் என்பது தான் முக்கியமே தவிர, எத்தனை கோடி வசூல் செய்கிறது என்பது முக்கியமல்லை.

நான் ‎அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைத்திருந்தால் நிகழ்காலத்திலே வந்திருப்பேன். எதிர்காலத்திலும் அதற்கு வாய்ப்பில்லை. அரசியலுக்கு வர வேண்டும் என்றால் அதற்கு உறுதியான மனநிலை வேண்டும். அது எனக்கு இல்லை.

விஜய் சார் முதல்வரானது வியப்பு

விஜய் சார் முதலமைச்சர் ஆனதில் எனக்கு ‎ஆச்சரியமாக இருந்தது. எனென்றால் அவருக்கு ‎அவ்வளவு பிரச்சனைகள் வந்தன. தமிழக மக்கள் அவருக்கு வாக்களித்து இருக்கிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்கும் போக்கு இந்த தேர்தலில் உடைந்து இருக்கிறது. சாதி, மதம் சார்ந்த வாக்கு வங்கி உடைக்கப்பட்டுள்ளது. அனைவரி்ன் தேர்தல் கணக்குகளும் சுக்குநூறாக உடைந்திருக்கிறது.

இது ‎நிச்சயம் 200 சதவீதம் விஜய் சார் படம் தான். டிரெய்லரில் வந்த 'ஐ ஆம் கமிங்' என்ற வசனத்தை மாற்றவில்லை. அப்போது சூழல் அப்படி இருந்தது. இப்போது விஜய் சார் முதலமைச்சர் ஆகிவிட்டார். அதனால் டைம் மிஷினில் பின்னோக்கிச் சென்று பார்க்க வேண்டும்.

மக்கள் மனதில் இடம்பிடிப்பது தான் விருது

‎திரைப்பட வளர்ச்சி மற்றும் மக்கள் வளர்ச்சிக்காக படம் எடுப்பவர்களுக்கு விருது கொடுத்தால் நன்றாக இருக்கும். விருது கமிட்டியில் இருப்பவர்கள் மனநிலை பொறுத்து தான் விருது அமைகின்றன. ‎ஒரு படம் மக்கள் மனதில் இடம் பிடிப்பதுதான் சிறந்த விருதாக இருக்கும்.

கரூர் சம்பவத்தை திசை திருப்ப "ஜனநாயகன்: படத்தை விஜய் இணையத்தில் கசியவிட்டார் என்று வதந்திகள் பரவின. அதைக் கேட்டு எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. 400 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள திரைப்படத்தை அவரே இணையத்தில் கசிய விடுவாரா? அப்படி அவர் கசிய விட்டிருந்தால் அதை எளிதாக கண்டுபிடித்திருக்கலாமே?

படத்தின் டிரைலர் காட்சியில் தவறு செய்யக்கூடிய அரசியல்வாதிகளை சாட்டையால் அடிப்பது போன்ற காட்சிகள் இருக்கும். கதைக்கு தேவைப்பட்டதால் அப்படி காட்சி அமைக்கப்பட்டது. எந்தவிதமான தனிமனித தாக்குதலும் கிடையாது" என்று தெரிவித்தார்.‎