காமன்வெல்த் 2026; இந்தியா இதுவரை தங்கம் 13, வெள்ளி 17, வெண்கலம் 9 வென்று அசத்தல்
நமது நிருபர்
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. இந்திய தடகள வீரர் குல்வீர் சிங் ஆண்கள் 5,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஆண்கள் 90 கிலோ எடைப் பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நரேந்தர் பெர்வால், இங்கிலாந்தின் டமர் தாமஸிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.
காமன்வெல்த் விளையாட்டு இந்தியா இன்று...
இந்திய நட்சத்திரங்கள் பங்கேற்கும் முக்கிய போட்டிகள்;
78 கிலோ: இஷ்ரூப் நரங், நேரம்: மதியம் 2:30 மணி
100 கிலோ: அவதார் சிங், மதியம் 2:35 மணி
+100 கிலோ: யாஷ் கங்காஸ், மதியம் 2:48 மணி
* நிறைவு விழா
அதிகாலை 12:30 மணி (ஆக. 3)
கடந்த கால வரலாறு
கடந்த 5 காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பெற்ற பதக்க விபரம்
* 2022ல் - 22 தங்கம் - 16 வெள்ளி - 23 வெண்கலம் - மொத்தம் 61 - பட்டியலில் 4வது இடம்
* 2018ல் - 26 தங்கம் - 20 வெள்ளி - 20 வெண்கலம் - மொத்தம் 66 - 3வது இடம்
* 2014ல் - 15 தங்கம் - 30 வெள்ளி - 19 வெண்கலம் - மொத்தம் 64 - 5வது இடம்
* 2010ல் - 38 தங்கம் - 27 வெள்ளி - 36 வெண்கலம் - மொத்தம் 101 - 2வது இடம்
* 2006ல் - 22 தங்கம் - 17 வெள்ளி - 11 வெண்கலம் - மொத்தம் 50 - 4வது இடம்