📅 Thursday, 30 July 2026 IST | ஆடி 14, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 30, 2026 11:34 AM

காமன்வெல்த் 2026: மாற்றுத்திறனாளி தடகளப் போட்டியில் இந்தியாவின் திலீப் காவிட் தங்கம் வென்று அசத்தல்

காமன்வெல்த் 2026: மாற்றுத்திறனாளி தடகளப் போட்டியில் இந்தியாவின் திலீப் காவிட் தங்கம் வென்று அசத்தல்

நமது நிருபர்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், காமன்வெல்த் விளையாட்டு 23வது சீசன் நடக்கிறது. பாரா தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் திலீப் காவிட் தங்கம் வென்றார். இதேபோட்டியில் மற்றொரு மாற்றுதிறனாளி வீரரான முகமது பாசில் 2வது இடம் பிடித்து இந்தியாவுக்கு வெள்ளி வென்று கொடுத்தார். அதேபோல, நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஶ்ரீசங்கர் ஆகியோர் வெள்ளி பதக்கங்களை வென்றார்.

இதுவரை இந்தியா இரண்டு தங்கம், ஏழு வெள்ளி, மூன்று வெண்கலம் என 12 பதக்கங்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா தொடர்ந்து முன்னணியில் இருந்தாலும், இந்தியா பதக்கப்பட்டியலில் தற்போது 8 வது இடத்தில் உள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு இந்தியா இன்று...

* ஈட்டி எறிதல் தகுதிச் சுற்று- நீரஜ் சோப்ரா, யாஷ் வீர் சிங், நேரம்: மதியம் 2:55 மணி

* 400 மீ., ஓட்டம், அரையிறுதி-விஷால், மாலை 5:40 மணி

* குண்டு எறிதல், பைனல்- சமர்தீப் சிங், தஜிந் தர்பால் சிங், இரவு 11:30 மணி

* வட்டு எறிதல், பைனல்- நிதி ராணி, சீமா, அதி காலை 1:10 மணி (ஜூலை 31)

* 5000 மீ., ஓட்டம், பைனல்- பாருல் சவுத்ரி, அதிகாலை 1:48 மணி (ஜூலை 31)

பளுதுாக்குதல்

* மார்டினா (+86 கிலோ), மாலை 6:30 மணி

* லவ்பிரீத் சிங் (+110 கிலோ), இரவு 11:00 மணி

லான் பவுல்ஸ்

* ஆண்கள் இரட்டையர், லீக் சுற்று- இந்தியா-போட்ஸ்வானா, நேரம்: இரவு 7:30 மணி