காமன்வெல்த் போட்டி 2026 பதக்கப் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்? முதல் டாப் 10 விவரம்
காமன்வெல்த் போட்டி 2026 பதக்கப் பட்டியல்.. இந்தியாவுக்கு எந்த இடம்? முதல் டாப் 10 விவரம்
கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டிகள் 2026-ல் இந்திய அணி தனது சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. ஜூலை 28 அன்று நடைபெற்ற போட்டிகளில் ஹர்ஜிந்தர் கவுர் மற்றும் குல்வீர் சிங் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவின் பதக்க பட்டியலை 12 ஆக உயர்த்தியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்தப் பட்டியலில் இந்திய அணி எட்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது.
மகளிருக்கான 69 கிலோ எடைதூக்கும் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று ஹர்ஜிந்தர் அன்றைய தினத்திற்கான இந்தியாவின் பதக்க கணக்கைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து, ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று குல்வீர் சிங் புதிய சரித்திரம் படைத்தார். காமன்வெல்த் போட்டிகள் வரலாற்றில் இந்த பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்த இரண்டு பதக்கங்களுடன், கிளாஸ்கோ போட்டிகளின் நான்காம் நாள் முடிவில் இந்திய அணி 2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது. பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 32 தங்கம், 16 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 72 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.
கனடா 33 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து 42 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்து நான்காவது இடத்தில் இருக்க, அதைத் தொடர்ந்து நைஜீரியா, தென்னாப்பிரிக்கா, மலேசியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
போட்டியை நடத்தும் ஸ்காட்லாந்து 7 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலத்துடன் மொத்தம் 14 பதக்கங்களைப் பெற்று நான்காவது இடத்திலும், நைஜீரியா 6 தங்கம், 4 வெள்ளியுடன் மொத்தம் 10 பதக்கங்களைப் பெற்று ஐந்தாவது இடத்திலும் உள்ளன. தென்னாப்பிரிக்கா 4 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலத்துடன் மொத்தம் 15 பதக்கங்களைப் பெற்று ஆறாவது இடத்திலும், மலேசியா 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலத்துடன் மொத்தம் 8 பதக்கங்களைப் பெற்று ஏழாவது இடத்திலும் உள்ளன. இந்திய அணி 2 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலத்துடன் மொத்தம் 12 பதக்கங்களைப் பெற்று எட்டாவது இடத்தில் உள்ளது.
நியூசிலாந்து 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலத்துடன் மொத்தம் 10 பதக்கங்களைப் பெற்று ஒன்பதாவது இடத்திலும், ஜமைக்கா 2 தங்கப் பதக்கத்துடன் பத்தாவது இடத்திலும் உள்ளன.செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் மகளிருக்கான 69 கிலோ எடைதூக்கும் பிரிவில் ஹர்ஜிந்தர் கவுர் வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டின் முதல் பதக்கத்தைப் பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து, ஆடவர் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் குல்வீர் சிங் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். காமன்வெல்த் வரலாற்றில் நீண்ட தூர ஓட்டப் பந்தயத்தில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.