📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 29, 2026 12:32 PM

காமன்வெல்த் போட்டிகள் 2026: தங்கம் வென்று ஷர்மிளா தன்கர் சாதனை; ஒரே நாளில் 6 பதக்கங்களை வாரிக்குவித்தது இந்தியா!

காமன்வெல்த் போட்டிகள் 2026: தங்கம் வென்று ஷர்மிளா தன்கர் சாதனை; ஒரே நாளில் 6 பதக்கங்களை வாரிக்குவித்தது இந்தியா!

காமன்வெல்த் போட்டிகள் 2026: தங்கம் வென்று ஷர்மிளா தன்கர் சாதனை; ஒரே நாளில் 6 பதக்கங்களை வாரிக்குவித்தது இந்தியா!

காமன்வெல்த் பாரா தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை ஷர்மிளா தன்கர் படைத்துள்ளார்.

Published : July 28, 2026 at 9:52 AM IST

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய அணி ஒரே நாளில் ஒரு தங்கம், 3 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வாரிக்குவித்து அசத்தியுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி, பதக்கங்களை வாரிக்குவித்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக நேற்றைய தினம், இந்தியா ஒரே நாளில் ஒரு தங்கம், மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில், இந்தியா 10 பதக்கங்களுடன் 8ஆவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

ஷர்மிளா வரலாற்றுச் சாதனை

அந்த வகையில், மகளிர் பாரா தடகள குண்டு எறிதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரம் குண்டு எறிந்து முதலிடம் பிடித்ததுடன், இந்தியாவிற்கான தங்கப் பதக்கத்தையும் உறுதி செய்தார். இதன் மூலம் காமன்வெல்த் பாரா தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். அதேசமயம், இதே பிரிவில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வீராங்கனையான ஷில்பா வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். காமன்வெல்த் தடகள வரலாற்றில் ஒரே போட்டியில் இரண்டு இந்திய வீராங்கனைகள் பதக்க மேடையைப் பகிர்ந்து கொள்வது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

HISTORIC GOLD IN GLASGOW! 🥇🇮🇳Sharmila wins Gold in Women's Shot Put F57 & creates history at #CWG2026. She becomes India's first-ever Commonwealth Games Gold medallist in Para Athletics.Your indomitable spirit has made the entire nation proud on the global stage.… pic.twitter.com/gP1RA7ZHbn

சர்வேஷ் குஷாரேவுக்கு வெள்ளி

ஆடவருக்கான உயரம் தாண்டுதல்போட்டியில் இந்தியாவின் வீரர் சர்வேஷ் குஷாரே, வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். முன்னதாக நடைபெற்ற தங்கப் பதக்கத்திற்கான விறுவிறுப்பான சுற்றில், சர்வேஷ் குஷாரே மற்றும் ஜமைக்காவின் ரோமைன் பெக்ஃபோர்ட் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் இருவருமே 2.25 மீட்டர் உயரத்தை வெற்றிகரமாக தாண்டினர். அதன்பின் நிர்ணயிக்கப்பட்ட 2.28 மீட்டர் உயரத்தை இருவராலும் தங்களது மூன்று முயற்சிகளிலும் தாண்ட முடியவில்லை.

இருப்பினும், முந்தைய சுற்றுகளின் அடிப்படையில், ஜமைக்காவின் ரோமைன் பெக்ஃபோர்ட்டுக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக, சர்வேஷ் குஷாரே நூலிழையில் தங்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார். இருப்பினும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் உயரம் தாண்டுதல் வரலாற்றில், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத் தரும் முதல் தடகள வீரர் என்ற புதிய மைல்கல்லை சர்வேஷ் குஷாரே எட்டியுள்ளார்.

Sheer strength on show! 🥈Many congratulations to Khelo India athlete Valluri Ajaya Babu on winning the Silver Medal in the Men's 79kg Weightlifting. With a total lift of 330kg, he also set a Commonwealth Games record in the Snatch. A memorable performance and another proud… pic.twitter.com/GMCQPQtIvm

பளுதூக்குதலில் தொடரும் ஆதிக்கம்

இந்திய பளுதூக்குதல் வீரர்கள் இந்த தொடரிலும் தங்களது ஆதிக்கத்தைத் தொடர்ந்து வருகின்றனர். அந்தவகையில், ஆடவருக்கான 79 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் வல்லூரி அஜய் பாபு, மொத்தம் 330 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தினார். அதேபோல், மகளிருக்கான 53 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை ஞானேஸ்வரி யாதவ், மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதுதவிர, மகளிருக்கான 58 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பிந்த்யாராணி தேவி, மொத்தம் 199 கிலோ எடையைத் தூக்கி வெண்கலப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தினார்.

இதையும் படிங்க

பதக்கப் பட்டியல் நிலவரம்

நேற்றைய போட்டிகளின் நிறைவில், இந்திய அணி ஒட்டுமொத்தமாக 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8ஆவது இடத்தில் நீடிக்கிறது. இப்பட்டியலில் ஆஸ்திரேலியா 59 பதக்கங்களுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 32 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், கனடா 21 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.