📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 28, 2026 08:33 AM

காமன்வெல்த் பதக்கப்பட்டியல்.. 2 தங்கம் வென்ற இந்தியா எந்த இடம்? முதல் இடத்தில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்

காமன்வெல்த் பதக்கப்பட்டியல்.. 2 தங்கம் வென்ற இந்தியா எந்த இடம்? முதல் இடத்தில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்

காமன்வெல்த் பதக்கப்பட்டியல்.. 2 தங்கம் வென்ற இந்தியா எந்த இடம்? முதல் இடத்தில் ஆஸ்திரேலியா ஆதிக்கம்

கிளாஸ்கோ: கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் 5வது நாளில், இந்திய அணி தங்கம், வெள்ளி, வெண்கலம் எனப் பதக்கங்களை வாரிக்குவித்து அசத்தியுள்ளது. இதன் மூலம் 2 தங்கம் உட்பட 10 பதக்கங்களுடன் இந்திய அணி பதக்கப் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தியாவின் பதக்க வேட்டையில் பாரா தடகளப் போட்டியில் ஷர்மிளா தன்கர் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். இதே போட்டியில் ஷில்பா வெண்கலம் வென்றார். மேலும், பளுதூக்குதலில் ஆண்கள் 79 கிலோ பிரிவில் அஜய் பாபுவும், பெண்கள் 53 கிலோ பிரிவில் ஞானேஸ்வரி யாதவும் வெள்ளிப் பதக்கங்களைக் கைப்பற்றினர். பெண்கள் 58 கிலோ பளுதூக்குதலில் பிந்தியாராணி தேவி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். ஆண்கள் உயரம் தாண்டுதலில் சர்வேஷ் அனில் குஷாரே வெள்ளிப் பதக்கம் வென்று மிரட்டினார்.

தற்போது இந்திய அணி 2 தங்கம், 5 வெள்ளி மற்றும் 3 வெண்கலப் பதக்கங்களுடன் ஒட்டுமொத்தமாக 10 பதக்கங்களைப் பெற்று 8வது இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலிய அணி 26 தங்கம் உள்பட 59 பதக்கங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

காமன்வெல்த் 2026 பதக்கப் பட்டியல் (முதல் 10 இடங்கள்):

ஆஸ்திரேலியா: 26 தங்கம் - 13 வெள்ளி - 20 வெண்கலம் - 59 பதக்கங்கள்

இங்கிலாந்து: 8 தங்கம் - 13 வெள்ளி - 11 வெண்கலம் - 32 பதக்கங்கள்

கனடா: 7 தங்கம் - 8 வெள்ளி - 6 வெண்கலம் - 21 பதக்கங்கள்

நைஜீரியா: 6 தங்கம் - 4 வெள்ளி - 0 வெண்கலம் - 10 பதக்கங்கள்

ஸ்காட்லாந்து: 5 தங்கம் - 4 வெள்ளி - 2 வெண்கலம் - 11 பதக்கங்கள்

தென்னாப்பிரிக்கா: 3 தங்கம் - 3 வெள்ளி - 5 வெண்கலம் - 11 பதக்கங்கள்

மலேசியா: 3 தங்கம் - 0 வெள்ளி - 2 வெண்கலம் - 5 பதக்கங்கள்

இந்தியா: 2 தங்கம் - 5 வெள்ளி - 3 வெண்கலம் - 10 பதக்கங்கள்

ஜமைக்கா: 2 தங்கம் - 0 வெள்ளி - 0 வெண்கலம் - 2 பதக்கங்கள்

கென்யா: 1 தங்கம் - 2 வெள்ளி - 2 வெண்கலம் - 5 பதக்கங்கள்