Business
June 25, 2026 05:34 AM
காங்கயம் அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர் போராட்டம்
காங்கயம்: காங்கயம் தலைமை அரசு மருத்துவமனையில் துாய்மை பணியாளர் நேற்று காலை முதல் மதியம் வரை பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், '14 ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் வழங்கப்படுமென பணியில் சேர்த்துக் கொண்டனர். தற்போது, 11 ஆயிரம் தான் தருகின்றனர்.
மூன்று மாதங்களாக, 70 ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், பதில் தரவில்லை. எனவே, போராட்டத்தில் இறங்கினோம்,' என்றனர்.
மருத்துவமனை நுழைவு வாயில் முன் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், காங்கயம் தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் தியாகராஜன், போலீசார், விரைவில் பேசி தீர்வு காணப்படும் என உறுதி அளித்து, பணிக்கு திரும்ப செய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
Business