காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு முறையீடு
புதுடெல்லி,
தமிழ்நாட்டிற்கு விகிதாச்சார அடிப்படையில் தரவேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன் ஜி.உமாபதி, வக்கீல் பி.கருணாகரன் ஆகியோர் தாக்கல் செய்திருந்த மனுவில், “காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த ஜூலை 30-ந்தேதி பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தவும், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து நீரை திறந்துவிட்டு, 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அதாவது 4.536 டி.எம்.சி நீர் பிலிகுண்டுலுவில் வந்து சேருவதை உறுதி செய்யவும் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
10 நாட்களுக்கு ஒருமுறை
17-ந்தேதி விசாரணை
இந்த மனுவை இன்று (வியாழக்கிழமை) அல்லது நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஜி.உமாபதி ஆகியோர் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 10-ந்தேதி முறையிட்டனர். இந்த முறையீட்டை ஏற்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
கூடுதல் மனு தாக்கல்
மேலும் ஏற்கனவே உள்ள பற்றாக்குறை நீரை கணக்கில் கொண்டும், விகிதாச்சார அடிப்படையிலும் தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் மொத்தம் 36.63 டி.எம்.சி. கிடைக்கும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.