Latest News
September 18, 2026 07:31 PM
காவிரி நீர்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு
கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு நீர் திறந்து விட உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் "உரிய நீரை வழங்காத கர்நாடகா அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 16.01 டி.எம்.சி. நீரை திறந்தவிட உத்தரவு பிறப்பிக்க வேண்டும். தற்போது மேட்டூர் அணையில் உள்ள நீர் 30 நாட்களுகு்கு மட்டுமே போதுமானதாக இருக்கும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின் போரில் கர்நாடக அரசு போதுமான நீரை திறந்து விடாத நிலையில், தமிழக அரசு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
Latest News