📅 Saturday, 08 August 2026 IST | ஆடி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 07, 2026 11:33 AM

காவிரி விவாகத்தில் தவெக அரசு சமரசம் செய்யாது

காவிரி விவாகத்தில் தவெக அரசு சமரசம் செய்யாது

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டசபையில் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் பேசியதாவது;

மாதந்தோறும் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டுக்கான உரிய நீரை பெறுவதில் சாவாக உள்ளது. இந்த விவகாரம் குறித்து பேசுவதற்காக இரு மாநில முதல்-அமைச்சர்கள் இடையே கடந்த 3-ந்தேதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கர்நாடக முதல் மந்திரி அதை மறுத்துவிட்டார். தகுந்த நேரம் வரும்போது நேரில் சந்தித்து பேசுவோம் என தெரிவித்து விட்டார்.

மேட்டூர் அணை இந்த ஆண்டு திறக்க முடியாத சூழல் ஏற்பட்டது. குடிநீர் தேவைக்கு மட்டும் அணை திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை குறைவாக இருந்ததன் காரணமாக காவிரியில் தண்ணீர் வரவில்லை. சூழலுக்கு தகுந்தபடி மேட்டூர் அணை திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.

தவெக அரசு காவிரி விவாகத்தில் சமரசத்தில் ஈடுபடாது. சட்ட, நிர்வாக, தொழில்நுட்பரீதியாகநடவடிக்கை எடுத்து வருகிறது. காவிரி விவகாரம் தொடர்பாக பிரதமரிடம் முதல்-அமைச்சர் விஜய் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் நலன், மற்றும் காவிரி உரிமையை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது.”

இவ்வாறு அவர் பேசினார்.