காயிதே மில்லத் விருது, தொல்லியல் தலங்களுக்குக் கல்விச் சுற்றுலா
காயிதே மில்லத் விருது, தொல்லியல் தலங்களுக்குக் கல்விச் சுற்றுலா- தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்
வணிக வரிகள் துறையில் திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Published : August 5, 2026 at 5:53 PM IST
சென்னை: காயிதே மில்லத் பெயரில் புதிய விருது, தொல்லியல் தலங்களுக்கு கல்விச் சுற்றுலா போன்ற பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாகியுள்ளன.
2026-2027- ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று (ஆக.05) சட்டப் பேரவையில் தாக்கலாகியுள்ளது. பட்ஜெட்டில் அண்ணன் சீர், தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், வெற்றி வீடுத் திட்டம், இந்தியாவின் முதல் ஏஐ நகரம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பிராண்டட் சைக்கில்கள் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், தமிழ்நாடு பட்ஜெட் 2026-ல் வணிக வரிகள், பத்திரப்பதிவுத் துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையில் வெளியான முக்கிய அறிவிப்புகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தமிழ்நாடு பட்ஜெட்டில் வணிக வரிகள் துறைக்கு ரூபாய் 651 கோடியும், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறைக்கு ரூபாய் 475 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை
வணிக வரிகள் துறை நேரில் சந்திக்கத் தேவையில்லாத (Faceless), தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறைக்கு மாறும்; திட்டமிட்டு வரி ஏய்ப்பு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
'எங்கிருந்தும் பதிவுத்துறை பதிவு' அறிமுகப்படுத்தப்படும்; படிப்படியாக முழுமையாகக் காகிதமில்லா, நேரடி வருகையற்ற பதிவு முறைக்கு மாறும்.
வணிக வரிகள் துறைக்கு 651 கோடி ரூபாய் மற்றும் முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறைக்கு 475 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ் வளர்ச்சித்துறைக்கான முக்கிய அறிவிப்புகள்
தமிழ்நாடு பட்ஜெட்டில் தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூபாய் 3.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.